பக்கம்:நற்றிணை-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 91 வெயிலின் வெம்மையாலே கொதிப்புற்ற பரற்கற்களே யுடைய பள்ளங்களிலே, ஒருபக்கமாகக் கணிச்சியாலே குழிதோண்டிக் கிணருக்கியுள்ள இடத்தைப், பசுநிறை மேய்க்கும் ஆயர்கள் சென்று அடைவர். அதனிடத்தே நீரைக் காணுராகி, மேலும் பள்ளந் தோண்டி, அதனிடத்தே ஊறிவரும் நீரைக் குடித்தும் ஆனிரைக்கு ஊட்டியும் விடாய் தீர்ப்பர். அத்தகைய பத்தலையும், எங்கும் நீரைக் காணுத வான யானைக்கூட்டங்கள் வரிசையாகச் சென்று கவர்ந்து கொள்ளும். கானத்தின் தன்மையும் அது விளங்கும். மலை யிடத்திலுள்ள திண்ணிய மலையைப்போல நிலையான தன்மையாக இருக்கின்றது என்பர். அதுதான் எனக்கு அச்சத்தைத் தருகின்றது. நம் தலைவர் செல்லும் வழியை அப்படிக் கொடுவெம்மையோடும் படைத்த கொடியவன், தானும் அதனிடத்தே பையச்சென்று துன்புற்று நலிவாளுக! சொற்பொருள் : ஐதுஏகு-பையச் செல்லுக. கைகவர் முயக்கம்-இருவ்ர் க்ைகளும் மாறிப் பிறர் உடலைத் தழுவிய படி கிடக்கின்ற முயக்கம். திருகி-மாறுபட்டு; புரண்டு படுத்து என்க. பரல்-பரற்கற்கள். அவல்-பள்ளம். கணிச்சிகுந்தாலி; பாறைப் பகுதியை உடைக்கும் வலிய இருப் பாயுதம். கூவல்-குழி. பத்தல்-அதிற்செய்த பள்ளம்; பட்டை யால் முகந்து கொள்ள ற்கு ஏற்றபடி தோண்டப்படுதலின் 'பத்தல்’ என்றனர். பள்ளத்தே நீர் இருக்கலாம்; அஃதின்றி வறண்டது; அதன்பால் குந்தாலியால் குழித்துக் கிணறு போலத் தோண்டியிருந்தனர்; அதுவும் வறண்டது; அதன் நடுவில் மீளவும் தோண்டி, அதன்கண் எழுந்த சிறு ஊறலை ஆயர் உண்டனர்; அவர் தோண்டிய அப் பத்தல் தானும் இதுபோது யானை இன நிரைகளால் கவரப்பட்டன. அதுவும் இனி இல்லை என்பதாம். விளக்கம் : என்னலே துய்த்து இன்புறுதற்கு ஏதுவாகிய அவரது மெய்தானும், நீரற்ற அந்த நெடுவழியிலே வாடி நலனிழந்து போவதுபோலும் என்று வேதனைப்படுகின்ற தலைவியானவள், இந்த உலகத்தைப் படைத்தவன் அந்த வழியிடை மெல்லமெல்லச் சென்று தானும் அந்தத் துயரை அநுபவிப்பாகை என்று சபிக்கின்ருள். அவளது பிரிவுப் பெருந்துயரத்தின் வெம்மை இதேைல நன்கு விளங்கும். கோவலர் இவ்வாறு பத்தல் தோண்டுவது வழக்கம் என் பதனை, பநிரை சேர்ந்த பாழ்நாட்டாங்கண், நெடு வெளிக் சோவலர் கூவற்றேண்டிய, கொடுவாய்ப் பத்தல் வார்ந்துகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/93&oldid=774785" இலிருந்து மீள்விக்கப்பட்டது