உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

189


மேற்கோள் : 'நின்னாற் காணப்பட்டாள் எவ்விடத்தாள்? எத்தன்மையாள்?' எனப் பாங்கன் வினவுதலும், அதற்குத் தலைமகன் இடமும் உறவும் கூறுதல்' எனக் 'குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்' என்னும் துறைக்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணனார் (தொல். பொருள். சூ. 99 உரை). இதற்கே ஆசிரியர் நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர் (தொல். பொருள். சூ. 102 உரை.)

96. பைஇப் பையப் பசந்தனை!

பாடியவர் : கோக்குளமுற்றனார். திணை : நெய்தல். துறை : சிறைப்புறமாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய் வரைவு கடாயது.

[(து–வி ) சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்டு வரைந்து கோடலிலே தன்னுள்ளத்தைச் செலுத்துமாறு, தலைவிக்குச் சொல்லுவாள் போல, அவனும் கேட்குமாறு தோழி சொல்லுகின்றாள்.]

'இதுவே, நறுவீ ஞாழல் மாமலர் தாஅய்ப்
புன்னை ததைந்த வெண்மணல் ஒருசிறைப்
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே;
பொம்மற் படுதிரை நம்மோடு ஆடிப்
புறந்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் 5
துவரினர் அருளிய துறையே; அதுவே,
கொடுங்கழி நிவந்த நெடுங்கால் நெய்தல்
அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇத்
தமியர் சென்ற கானல்' என்று ஆங்கு 10
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி,
பைஇப் பையப் பசந்தனை பசப்பே!

தோழீ! நறுமணங்கொண்ட ஞாழலது சிறந்த மலரும். புன்னையது சிறந்த மலரும் ஒருங்கே உதிர்ந்து பரவிக் கிடக்கின்ற வெண்மணற் பாங்கின் ஒருபக்கத்தே. புதிதாகத் தலைவனோடு கூடிப்பெற்ற இன்பத்திற்கு இடமாயிருந்த பொழிலும் இதுவேயாகும் என்றும்,

பொலிவுடைய கடற்றுறையிடத்தே என்னோடும் சேர்ந்து கடல்விளையாட்டினை அயர்ந்தபின், என் முதுகுப்புறத்தே தாழ்ந்து இருண்டு விளங்கிய ஐம்பகுதியாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/190&oldid=1685985" இலிருந்து மீள்விக்கப்பட்டது