உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

நற்றிணை தெளிவுரை


இருப்பாளாயினள். ஆதலின், நீ மேற்கொள்ளும் களவாகிய ஒழுக்கம், நின் தகுதிக்குப் பொருந்துவதாமோ என்னும் நிலையினை நின் உள்ளத்தோடு ஆராய்ந்து, நீயே முடிவுக்கு வருதல் வேண்டும்.

கருத்து : 'இனி அவனை மணந்து இல்லறமாற்ற முனைதலே நினக்குச் சிறப்பாகும்' என்பதாகும்.

சொற்பொருள் : இருங்கல் அடுக்கம் – பெரிதான மலைச் சாரல். கடியுண்ணல் – கொய்யப்படுதல். அவல் – பள்ளம். நரை – வெண்மை; மின்னொளியைக் குறித்தது. பெருமையும் ஆம். நாமம் - அச்சம் – அமரா முகம் – சினந்தோன்றும் முகம்.

விளக்கம் : தினை கடியுண்டனவாதலால், இனிப் பகற்குறிக் கூட்டம் வாயாதென்றனள். மௌவல் அரும்பின என்றதால், வரைந்து கோடற்கு உரியதான காலத்தின் வரவை உணர்த்தினள். அன்னையும் அமரா, முகத்தினள் என்றதனால், அன்னை ஐயுற்றமை கூறி இரவுக்குறி வாயாமையும் சொல்லினள். இதனால் வரைந்து வந்து மணத்தலே செய்யத்தக்கது என்பதனைக் குறிப்பாக உணர்த்தினனாம் 'நரை' – பெருமை: இதனைக் 'சுருநரை நல்லேறு' என வரும் குறுந்தொகை அடியானும் உணர்க (குறுந் 317), முல்லை மலர்ந்து கார் காலத்தைத் தெரிவித்தலை, 'சொல்லுப வன்ன முல்லை மென்முகையே' என்னும் குறுந்தொகை யடியானும் அறிசு – (குறுந் 358.4.7).

123. நோயினைக் கூறாய்!

பாடியவர் : காஞ்சிப் புலவனார்.
திணை : தெங்கல்.
துறை : தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

[(து–வி.) களவொழுக்கப் பிரிவினாலே கலங்கி வருந்தும் தலைவியது தன்மையைத் தலைவனுக்கு உணர்த்தி, விரைய வந்து அவளை வரைந்து கொள்ளுதற்குத் தூண்டுதலை நினைக்கின்றாள் தோழி. ஒரு சமயம் அவன் சிறைப் புறத்தானாதலை அறிந்தவள், தலைவிக்குச் சொல்லுவாள் போல அவனும் கேட்டுணருமாறு இப்படிக் கூறுகின்றாள்.]

உரையாய் வாழி, தோழி! இருங்கழி
இரைஆர் குருகின் நிரைபறைத் தொழுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/241&oldid=1692087" இலிருந்து மீள்விக்கப்பட்டது