உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

315


[(து–வி.) தலைவன் பொருளைத் தேடிக்கொண்டு மீண்டனன் என்பதனை ஏவலாட்டியர் வழியாகக் கேள்வியுற்ற தோழி, தலைவியிடம் சென்று கூறுவதாக அமைந்த செய்யுள்.]

'உறைதுறந் திருந்த புறவில் தனாது
செங்கதிர்ச் செல்வன் தெறுதலின் மண்பக
உலகுமிக வருந்தி உயாவுறு காலைச்
சென்றனர் ஆயினும் நன்றுசெய் தனர்'எனச்
சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் 5
செங்கோல் வாளிக் கொடுவில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர்த்திறம் பெயர்த்தென
வெங்கடற்று அடைமுதல் படுமுடை தழீஇ
உறுபசிக் குறுநரி குறுகல் செல்லாது
மாறுபுறக் கொடுக்கும் அத்தம்
ஊறுஇல ராகுதல் உள்ளா மாறே. 10


தோழி! மழையினையே பெறாதிருந்த காட்டுப் பகுதியில், அந் நிலத்தினது தெய்வமாகிய சிவந்த கதிர்களையுடைய கதிரவன் காய்தலைச் செய்தனன். அதனால், நிலமும் வெடிப்புடையதாய் மாறிற்று. உலகமும் மிகவும் வருந்தித் துன்புறுவதாயிற்று. இத்தகைய கோடைக் காலத்தே பயணப்பட்டுத் தலைவரும் சென்றனர். ஆயினும் 'இல்வாழ்க்கைக்கு நன்மை யாவதொரு செயலையே செய்தனர்' எனச் சொன்னேன். என் சொற்களால் நின்னையான் தெளிக்கவும், நீயும் தெளிந்தாயல்லை.

செம்மையான கோலின் வடிவைக் கொண்டவாகிய அம்புகளைக் கொண்டவர், கொடிய வில்லினாலே தொழிலாற்றும் ஆறலை கள்வர்கள். அவர்கள், புதியவராக வரும் வழிப்போக்கரது உயிரைப் போக்கிப் பொருள்களைப் பறித்துப் போவர். அங்ஙனம் உயிரிழந்தவாய்க் கிடந்த உடலங்கள் வெம்மையுடைய பாலைவழியின் முற்பக்கத்தேயே முடை நாற்றத்தைப் பரப்பியபடியிருக்கும். அந்த நாற்றத்தைக் கொண்டு, பசியுற்ற குள்ளநரியானது, தானும் அவ்வழியே சென்று, அப் பிணங்களை உண்ணக் கருதாதாய்த் திரும்பி வேறுவழியாகச் செல்லும் அத்தகைய பாலைவழியைக் கடந்து செல்லுங்கால், அவர் தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/316&oldid=1696084" இலிருந்து மீள்விக்கப்பட்டது