பக்கம்:நலமே நமது பலம்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் - 99

வாழ்வு வாழவேண்டும் என்பதை வலியுறுத்தி ஓட்டப்பந்தயம் என்ற திரைப்படத்தையும் தயாரித்து வெளியிட்டிருக்கிறேன்.

எனது வரலாற்றை, இங்கே எழுதிக் காட்டிக் கொண்டி ருக்கவில்லை. பிறர் சொல்லக் கேட்டோ, புத்தகத்தில் படித்ததையோ நான் உங்களுக்குச் சொல்ல வில்லை.

விபத்து என்றால் இழப்பு, கழிவு, நஷடம், கஷ்டம், வேதனை என்று விவரித்தேன் அல்லவா! அதை விளக்கிக் காட்டுவதற்காகவே எழுதினேன்.

வியாபாரத்திற்காக நான் சென்றபோது ஏற்பட்ட விபத்தில், எனது நோக்கமெல்லாம் பாழானது. இலட்சிய மெல்லாம் வீணானது.

நல்ல நண்பர்களையும் அருமையான அன்பர்களையும் சந்திக்கின்ற வாய்ப்புகள் நழுவிப் போயின.

நான் குறிப்பிட்ட நேரத்தில் போய்ச் சேராததால், அவர்கள் பெற்ற படப்படப்பும் பதைபதைப்பும் வீணான விளைவுகள் தானே!

வேனுக்காக செலவழித்த தொகை 10,000க்கு மேலே. நெய்வேலியிலே பத்து நாட்கள் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை. என்னால் நண்பர்களுக்கு ஏற்பட்ட பல அலைச்சல்கள். பல ஆயிரக் கணக்கான வருமானம் இழப்பு.

இந்த விபத்தினால் எனது வாழ்க்கையும் எனது இலட்சியமும் நிலை குலைந்து போனது.

முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையானது. இப்படி பலப்பல அவதிகள். எனது நேரடி அனுபவத்தை உங்களுக்கு விபத்தின் வீரியம் புலப்படுவதற்காக எழுதியிருக்கிறேன்.