பக்கம்:நலமே நமது பலம்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

பார்த்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களால் உதவ முடியுமா முடியாதா என்ற முடிவுக்கு வரவேண்டும். உதவ முடியும் என்ற நினைத்து விட்டால் உடனே நீங்கள் முதலுதவி செய்வதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

2. உங்களுக்குக் குழப்பமாக இருந்தால் அல்லது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருந்தால், மருத்துவமுறை எதையும் நீங்களே தொடங்கி விடாதீர்கள்.

3. அது உதவப்போய் உபத்திரவம் கொடுப்பதாக அமைந்து விடும். அதனால், அருகில் உள்ளவரில் ஒருவரை அழைத்து, ஒரு டாக்டரை அழைத்துவரச் செய்யச் சொல்லலாம். அல்லது அருகில் எதுவும் மருத்துவமனை இருந்தால், அங்கு எடுத்துச் செல்லும் ஏற்பாடுகளைச்

செய்யலாம்.

4. விபத்துக்கேற்பவே நீங்கள் முதலுதவியை மேற்கொள்ள வேண்டும். அது எந்தவகைப் (பட்ட) பாதிப்பு என்பதை நீங்கள் நிச்சயமாக உறுதி செய்து கொள்ள வேண்டும்.

5. சில காயங்களின் பாதிப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்பட உடனடியாக விரைந்து செயல்பட வேண்டும். அதிகமான இரத்தப்போக்கு, சுவாசம் நின்று போதல், விஷம் குடித்திருத்தல் போன்றவைகளுக்கு உடனே மருத்துவ மனையில் சேர்ப்பதுதான் முக்கியமாகும். தாமதிக்கிற ஒவ்வொரு விநாடியும் உயிருக்கு ஆபத்தாகவே அமையும்.

6. எலும்புகள் முறிந்திருந்தாலோ, உட்புறக் காயங்களாக இருந்தாலோ, கழுத்தோ அல்லது முதுகெலும்புப் பகுதிகளில் முறிவு ஏற்பட்டிருந்தாலோ மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். இல்லையேல், முறிவுகளில் மேலும் பல சிக்கல்கள் ஏற்பட்டுவிடும்.