பக்கம்:நலமே நமது பலம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எந்தப் பொருளையும் ரசித்துப் பார்க்கவும் முடிவதில்லை. ருசித்துச் சாப்பிட்டு மகிழவும் முடியாமற் செய்து விடுகிறது.

உலகத்தையே வெறுக்கும் அளவுக்கு உந்துதலைத் தருவது உடல்நலம் இன்மை என்பதால்தான். உடல் நலம் காக்கும் ஓர் உயர்ந்த வாழ்க்கையையே உண்மையான இலட்சிய மாகக் கொண்டு உலக மக்கள் வாழ முற்படுகின்றனர். முயற்சிக்கின்றனர். அதையே முழு வாழ்வு என்று புகழ்கின்றனர். நுண்மையான நோக்கம்:

ஆகவே நாம் நியாயமான ஒரு முடிவுக்கு இப்பொழுது வந்து விடுகிறோம். மனிதகுலம் விரும்புவது எல்லாம் நலமான வாழ்க்கையைத்தான். நலம் சார்ந்த வாழ்க்கையைத் தான்.

இந்த இனிய நிலையைத்தான், வீரத் துறவி விவேகாநந்தர் இப்படிக் கூறினார். வலிமையே வாழ்வு - பலஹlனம் மரணம்.

வலிமையானவர்கள் தங்கள் வாழ்வில் வளம் காண்கின்றார்கள். அன்றாடக் கடமைகளை ஆற்றலுடன் புரிகின்றார்கள். அதுபோலவே, பலஹlனமானவர்கள் மனிதர்கள் என்ற பெயரிழந்து நோயாளிகள் என்ற பெயரைப் பெற்று, பலஹlனமான துன்ப வாழ்வைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.

பலமில்லாத ஒருவனைப் பெற்றவளும் விரும்ப மாட்டாள், பண்பான மனைவியும் விரும்பமாட்டாள் என்று ஒரு பழம் பாடலே பெரிதுபடுத்திப் பாடுகின்றது.

பலமில்லாத, நலமில்லாத ஒருவன், நல்ல படிப்பாளியாக இருந்தாலும், நுணுக்கமான கைத்தொழிலைக் கற்றுக் கொண்டிருந்தாலும், அவனுக்கு வேலை கொடுக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/12&oldid=690926" இலிருந்து மீள்விக்கப்பட்டது