பக்கம்:நலமே நமது பலம்.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 163

விரைவில் குணப்படுத்தும் வாய்ப்பை மருத்துவருக்கு அளிக்கும் உதவியாக இருக்கும்.

விஷம் குடித்தவர் மயக்கமுற்றுக் கிடக்கும்போது, உணர்வின்றி சொரணையற்று இருக்கும்போது வாந்தி பண்ணச் செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.

விஷம் குடித்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி விடுவது நல்லது.

2. விஷத்தை முகர்ந்து விடுதல்:

விஷத்தன்மையுள்ள நச்சுப் பொருட்களை முகர்ந்து பார்த்து மூர்ச்சையாகி விடுபவர்கள் உண்டு. சிறிதளவு உணர்வுடன் விழிப்புத் தன்மை உள்ளவர்களாக இருப்பதும் உண்டு.

அப்படிப்பட்ட அவதியில் இருப்பவரை நடக்க வைக்கக்கூடாது. நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் இருக்க வைத்திட வேண்டும்.

ஆடைகள் இருக்கமாக இருந்தால் தளர்த்திவிடவும். அவரது உடல் சில்லிட்டுப் போயிருக்கும் என்பதால், உடலுக்கு வெப்பம் தருவதற்காகக் கனமான போர்வை அல்லது கம்பளியால் போர்த்திக் கொள்ளச் செய்தல் வேண்டும்.

மாற்று மருந்து என்று ஏதாவது மருந்தைக் கொடுத்துக் குடியென்று கொடுக்கக்கூடாது. வற்புறுத்தவும் கூடாது.

அவருக்குச் சுவாசம் தடைப்பட்டு இருந்தால், படுக்கச் செய்து, செயற்கைச் சுவாச முறையில் சுவாசம் ஊட்ட முயற் சிக்க வேண்டும். உடனடியாக வைத்தியரை வரவழைப்பது நல்லது.