பக்கம்:நலமே நமது பலம்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 1.65

இருந்தாக வேண்டுமல்லவா? அதற்கான எச்சரிக்கை முறைகளையும் நாம் இங்கே பார்ப்போம்.

வீட்டு உபயோகத்திற்காக வைத்திருக்கும் பிளீச்சிங் பவுடர், பெயிண்ட் மற்றும் வீட்டிற்குப் பயன்படும் மருந்துகள், இரசாயணப் பொருட்கள் எல்லாவற்றையும் குழந்தைகள் கைக்கு எட்டாத இடத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

ஈ, கொசு, பூச்சிகளைக் கொல்கின்ற பூச்சி மருந்து, இலை, தழை, செடி, கொடி போன்றவற்றைக் கொடிய விஷம் என்று கருத வேண்டும். அவைகள் தோலில் பட்டாலும் எரிச்சல் ஏற்படும். சில சமயங்களில் புண்ணாக்கிவிடும் என்பதால், கையுறைகள் போட்டுக் கொண்டு பயன்படுத்துவது புத்திசாலித்தனமாகும்.

அப்படியும் மீறி உடம்பில் பட்டால் உடனே தண்ணிரினால் கழுவி விட வேண்டும்.

பொதுவாக, பல விபத்து நிக்ழ்ச்சிகள் விஷப் பொருட்களை முகர்ந்து விடுவதால்தான் ஏற்படுகின்றன. ஆகவே, எதையும் எண்ணிப் பார்க்காமல் ஆராயாமல் நுகர்ந்து பார்க்கின்ற அவசர புத்தியை, ஆசையை அடக்கிக் கொள்ள வேண்டும். எச்சரிக்கையாக இருப்பது, இரட்டிப்பாக வரும் விபத்துக்களை விரட்டியடித்துவிடும் அல்லவா?

காளான் போன்றவைகள் மற்றும் காட்டுச் செடிகள் பலவும் விஷத் தன்மை உடையவைகளாகும். ஆகவே, எதையும் உண்ணுவதற்கு முன்பாக அதைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும். கவர்ச்சியாக இருக்கும் காட்டு மரப் பழங்கள் கூட, கொடிய விஷத் தன்மை கொண்டவையாக இருக்கும். ஆகவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.