பக்கம்:நலமே நமது பலம்.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


182 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

2. பாதுகாப்புக் கல்வியின் பணி:

1. எத்தனையோ வழிகளில், விபத்துக்கள் உருவாகும் சூழ்நிலையை விளங்கிக் கொள்ளுதல்.

2. விபத்துக்குள்ளாகின்ற சூழ்நிலைகளில் இருந்தாலும், அதினின்றும் விலகி, விபத்து நேராமல் பத்திரமாக வாழ்கின்ற வழிகளை மேற்கொள்ளுதல்.

3. தான் உணர்ந்து தெளிந்து கொண்ட உண்மைகளை வளர்த்துக் கொள்வதுடன், அதுபோன்ற முறையைப் பின்பற்ற மற்றவர்களுக்கு அறிவுறுத்தல்.

மேலே கூறிய வழிமுறைகளைத் தனி ஒருவருக்கு உணர்த்தி, அவரைப் பாதுகாப்புடன் பத்திரமாக வாழும் முயற்சியில் ஈடுபடுத்துவதுதான் பாதுகாப்புக் கல்வியின் சிறந்த பணியாகும்.

சந்தர்ப்பங்களைச் சாதுரியமாகக் கையாண்டு, சக்தியைப் பெருக்கிக் கொண்டு, பாதுகாப்பான பழக்க வழக்கங்களை மேற்கொண்டு, சந்தோஷமாக வாழ வைக்கப் பிறந்ததே பாதுகாப்புக் கல்வி. கடலில் செல்லும் கப்பலில் இருக்கும் உயிர்ப்படகாக, விமானத்தில் இருக்கும் பறக்கும் குடையாக விளங்கி வருகிறது.

3. பாதுகாப்புக் கல்வியின் தோற்றம்:

பரந்து எல்லையற்றுக் கிடக்கும் உலகம், தூரத்தின் அளவில் சுருங்கி விட்டது என்று கூறுவார்கள். விரைவான வாகன வசதிகள், நேரடிப் பேச்சு வசதி முறைகள் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி நிலைகளைக் குறிப்பிட்டுத்தான் அவ்வாறு கூறினார்கள். மகிழ்ச்சிக்குரிய முன்னேற்றந்தான் இது. -