பக்கம்:நலமே நமது பலம்.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 199

சாலையின் வெளிநிலை, மக்கள் இயக்க நிலை இவைகளுக் கேற்ப கவனமாக ஓட்ட வேண்டும்.

9. போதையுடன் ஒட்டுதல், உடல்நலம் இல்லாதபோது ஒட்டுதல், மனக்குழப்பத்துடன் ஒட்டுதல் அனைத்தும் பயங்கர விபத்துக்களுக்குப் பாதை வகுத்துவிடும்.

10. வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன், ஏதோ பெரிய சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து விட்டோம், உலகமே நம் கீழ்தான் என்ற வெறித்தன்மையில் இருக்காமல், இந்தப் பாதுகாப்பு தனக்கும் தன் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் உள்ள ஒன்று, என்ற நினைவுடன் பத்திரமாகவும் கவனமாகவும் ஓட்ட வேண்டும்.

11. அந்தி நேரங்களில் ஒளி மங்கும் சமயங்களில் தான் அதிக விபத்துக்கள் நேர்வதாக அறிக்கைகள் கூறுகின்றன. மிகவும் கவனம் வேண்டும்.

12. அந்தி நேரங்களில் அவசரம் இல்லாமல் ஓட்டுவது நல்லது. பக்கத்தில் உள்ளவர்களோடு ஊர்க்கதைகளைப் பேசி உரையாடிச் செல்வதும், தூக்கம் வந்து அதை சமாளித்துக் கொண்டு ஒட்டுவதும் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல.

13. நடை பயணிகளையும், மற்ற சைக்கிள் வாகனங்களின் ஒட்டுநர்களையும் மதித்து, அவர்களுக்கும் வழிவிட்டு, பத்திரமாக ஒட்டிச் செல்வது சிறந்த பாதுகாப்பு முறையாகும்.

பொது இடங்களில் பெற வேண்டிய பாதுகாப்பு முறைகளையும், அதற்குரிய வழிகளையும் இதுவரை கண்டோம். அதேபோல் நாம் வசிக்கின்ற வீட்டில் பெற வேண்டிய பாதுகாப்பு முறைகள் பல உண்டு. அவற்றின் தன்மைகளையும் இனி காண்போம்.