பக்கம்:நலமே நமது பலம்.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 2O3

2. ஏணி மேலே ஏறி நின்று எதையாவது எடுக்கும்போது தவறி நிலைமாறிக் கீழே விழுதல்.

3. மாடிப்படி தெரியாமல் மாற்றுப்படியில் கால் வைத்து உருண்டு கீழே விழுதல்.

4. தண்ணிர் பட்டுப்பட்டுத் தரையானது வழுக்கல் நிறைந்திருக்கும்போது, அதன்மேல் கால் வைத்து உறுதியில்லாமல் சறுக்கி விழுதல். -

5. புல் தரை மீது போகும்போது வழுக்கி விழுதல்.

6. வீட்டில் விரிக்கப்பட்டிருக்கும் சமுக்காளம் பாய் அல்லது கோணிக் கிழிசலில் கால் மாட்டிக் கொண்டு, போகும் அவசரத்தில் விழுதல்.

7. (குழந்தைகள்) ஒரு பொருளைத் தாண்டிச் செல்லும் போது நிலைமாறித் தடுமாறி விழுதல்.

8. தன்னால் தூக்க முடியாத பொருட்களைத் தூக்கிக் கொண்டு போகும்போது தன் வசமிழந்து சாய்ந்து விழுதல்.

9. வயதானவர்கள் நடைதடுமாறிக் G விழுந்து விடுதல்.

இவ்வாறு விழ வைக்கும் வாய்ப்புள்ள பகுதிகளை நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகிச் செய்ய வேண்டும். அதற்கு முன்கூட்டி ஆயத்தமாகவே வேறு சில முறைகளை, கீழ்க்காணும் நிலையில் செய்து பழகிக் கொள்ள வேண்டும்.

1. மேலே ஏறும்போது பத்திரமாக ஏறி இறங்கவும், பாதுகாப்புக்காகப் பக்கத்தில் யாரையாவது ஏணியையோ அல்லது ஏற உதவும் பொருட்களையோ பிடித்துக் கொள்ளச் செய்யவும். தன்னை மறந்த நிலையில் மேலே நிற்கும்போது இருக்கக்கூடாது.