பக்கம்:நலமே நமது பலம்.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே 595 பலம் 2O7

அதனால் முதலில் விபத்து உள்ளானவரின் அதிர்ச்சி யைப் போக்க வேண்டும். காயம் பட்டவர்களை மெதுவாகப் படுக்க வைத்து அவரது துணிகளைப் பொறுமையாக அவசரமின்றி அப்புறப்படுத்த வேண்டும்.

துணிகள் நைந்து காயத்துடன் ஒட்டியிருந்தால், துணிகளைப் பிய்த்து எறியக் கூடாது. சுற்றிலும் உள்ள துணிகள் மற்றும் தோலைப் பாதிக்காத முறையில் கத்திரிக்கோலால் வெட்டி எடுக்க வேண்டும்.

அப்பொழுது முதலுதவி என்று பஞ்சுடன் சேர்த்து மருந்து போடக் கூடாது. ஏனென்றால் பஞ்சும் புண்ணுடன் ஒட்டிக் கொள்ள நேரிடும். ஆகவே ஆயின்மென்ட் இருந்தால் தடவி

விடலாம்.

தடவி விடுபவர் கை நகம் விரல் பகுதிகள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். ஏனென்றால் தீப்புண்கள் வழியாக நச்சுக் கிருமிகள் உடல் உள்ளே புகுந்து விடும் வாய்ப்புண்டு.

இதற்கு இடையில் டாக்டரை வருவித்திட ஏற்பாடு செய்து விட வேண்டும்.

இத்தகைய கொடுமை வாய்ந்த தீயின் வாய்ப்படாமல் வீட்டில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக வேலை செய்ய வேண்டும்.

தீக்காயம் போலவே வெட்டுக் காயங்களும் நேர வாய்ப்புண்டு.

1. காய்கறி நறுக்கும் போது கைகளைக் வெட்டிக் கொள்ளுதல்.