பக்கம்:நலமே நமது பலம்.pdf/210

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2O8 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

2. காய்கறி வெட்டிய அரிவாள்மனையை அப்படியே நிமிர்த்தி வைத்துவிட்டு அப்புறம்போகும்போது, வீட்டிற்குள் வருபவர் அதனை அறியாது அதன்மேல் இடறி விழுந்து வெட்டிக் கொள்ளுதல்.

3. கூரிய கத்திகள், இரும்புப் பகுதிகள் முதலியவற்றை வரும் வழியில் அல்லது கண்ட இடங்களில் போட்டு விடுதல்.

4. வயல் மற்றும் மர வேலை செய்பவர்கள் தங்களது மண்வெட்டி, கடப்பாரை, ரம்பம், உளி போன்றவற்றைப் பாதுகாப்பு இல்லாத இடங்களில் பேட்டு வைக்கும்போது, விளையாடும் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் அவைகளினால் காயம் அடைய வழிகள் உண்டு.

ஆகவே காயம் ஏற்படுத்தக் கூடியனவற்றை ஒழுங்குபடுத்தி ஒதுக்குப் புறமாக வைக்க வேண்டும். 3. விஷப் பொருட்கள்:

மனிதர்கள் என்றால் நோய் நொடி வரத்தான் செய்யும். வீடு என்று இருந்தால் எலி, கொசு, மூட்டைப் பூச்சி போன்றவற்றை ஒழிக்க விஷ மருந்துகளையும் வாங்கத்தான் வேண்டும். -

இரண்டும் அவசியம் என்றாலும், அதற்காக இரண்டையும் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக வைக்கத்தான் வேண்டுமா? இதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. அல்லது தெரிந்தாலும் அலட்சியமாக ஒதுக்கி விடுவதுதான் ஏனென்று நமக்குப் புரியவில்லை.

தூங்குவதற்கு முன் மருந்து சாப்பிட மறந்து போய் நடுச்சாமத்தில், தூக்கக் கலக்கத்தில் மருந்து சாப்பிட முயன்று, மருந்துக்குப் பதிலாக விஷப் பொருட்களைத் தின்று விடுகின்றவர்களும், விஷத்தைக் குடித்துவிடுகின்றவர்களும் அநேகம் பேர் உண்டு.