பக்கம்:நலமே நமது பலம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 213

29. ஆடுகளத்தில் பாதுகாப்பு

/. ஆடுகளத்தின் பெருமை:

உடற் கல்வித் துறையிலே உன்னதமான இடத்தை வகிப்பது ஒட்டப் பந்தயங்களும், விளையாட்டுப் போட்டி களுமேயாகும்.

உற்சாகம் தருகிற விளையாட்டு, உணர்வுகளைத் தூண்டுகிறது. மனத்திற்கு இன்பமும் இதமும் அளிக்கிறது. சக்தியையும் சாமர்த்தியத்தையும் அளிக்க வல்லது. போரா டும் நினைவும், புலி போலும் செயலும் ஒன்றுக்கொன்று மீறிட, உடலை இயக்கி, ஆளுமைப் (Personality) பண்பை வளர்க்க வல்லது.

வாழ்வின் வன்முறையில் இருந்தும், வன்மங்களில் இருந்தும் விடுபடவும், ஒருவருக்கொருவர் உரையாடி மகிழவும், சிறந்த குணாதிசயங்களைப் பெறவும், வாழ்வுக்குப் பயன்படும் அனுபவங்களை அடையவும், வேற்றுமையை மறந்து ஒற்றுமையை வளர்க்கவும், தலைமை ஏற்று நடத்தவும், பிறர் தலைமைக்குத் தலைவணங்கித் தொடரவும், எதையும் தாங்கும் இதயம் பெறவும், சகலவிதமான சூழ்நிலை களுக்குரிய சந்தர்ப்பங்களை அளிப்பதும் விளையாடும் இடமான ஆடுகளங்களே.

இத்தகைய வீறுமிகுந்த ஆடுகளங்களிலே விளையாடு வோர் விழவும், அதனால் விபத்து நிகழவும் வாய்ப்புகள் உண்டு. அவற்றிலிருந்து விடுபடவும், விலகிக் கொள்ளவும் முடியும். அத்தகைய அரிய முறைகளை அறிந்து கொள்வதற்கு முன்னர், ஆடுகளத்தில் விபத்து நிகழக்கூடிய காரணங்களை முதலில் புரிந்து கொள்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/215&oldid=691031" இலிருந்து மீள்விக்கப்பட்டது