பக்கம்:நலமே நமது பலம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் - 29

இந்த இழிநிலைமை இந்தக் காலத்து மக்களிடமும் இன்றும் நிரம்பிக் கிடக்கிறது. நிறைந்து தவிக்கிறது.

பல நூற்றாண்டுக் காலமாக நோய் என்பது என்ன? அவை வருவதற்குரிய காரணங்கள் என்ன என்பது பற்றிய அறிவும் தெளிவும் இல்லாமல் மக்கள் மருண்டு கிடந்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் லூயிஸ் பாஸ்டர் என்ற விஞ்ஞானி கண்டு பிடித்த விந்தை மிகு ஆய்வின் முடிவுகளுக்குப் பிறகுதான், நோய்கள் உண்டாகும் ரகசியம் தெளிவாகப் புலப்படத் தொடங்கியது. நோய்கள் உண்டாகக்கூடிய காரணங்கள்:

1. பரம்பரைக் காரணக் கூறுகள்.

2. சத்தில்லாத உணவு.

3. பிறப்பில் ஊனமாக இருத்தல்.

4. கடுங்குளிரும் கடுமையான வெயிலுமான @

6Y .

5. அமிலங்கள், மதுவகைகள் போன்றவைகள்.

6. உடலமைப்பில் குறைவாகப் பணியாற்றும் உறுப்பின்

பாதிப்புகள்.

7. நோய்க்கிருமிகள்.

பரவும் நோய்க் கிருமிகள்:

கண்களுக்குப் புலனாகாத கிருமிகள் ஒருவரிடமிருந்து

ஒருவருக்குப் பரவுவதற்கு, பல்வேறு பொருட்கள் துணை புரிகின்றன. -