பக்கம்:நலமே நமது பலம்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 59

ஆரம்ப நிலையில் இந்நோய் வந்திருப்பதைத் தெரிந்து கொண்டால், எளிதில் குணமாக்கிவிட முடியும். -

நரம்புத் தொழுநோய் ஏற்படுகிறபோது பாதிக்கப்பட்ட தோல் பகுதி உணர்வை இழந்து விடுகிறது. பிறகு தோல் கொஞ்சம் கொஞ்சமாகத் தடித்துக் கொண்டே வருகிறது. அதனால் உணர்வுகளே இல்லாது போவதால், அந்தப் பகுதி முழுவதும் அழுகிப் பயனற்றுப் போகிறது.

அதுபோலவே கை கால் விரல்களில் உணர்வு மங்குவதுடன் அவை காலக் கிரமத்தில் குறைந்தும் போய் விடுகின்றன.

தோல் தொழுநோயினால் காதுப் பகுதிகள் மூக்குப் பகுதிகள் எல்லாம் முதலில் தடித்துப் போய், பிறகு தடிப்பில் வெடிப்பு ஏற்பட்டு திறந்த புண்ணாக மாறி, தொற்றிக் கொள்ளக் கூடிய அளவில் கிருமிகளை வெளிப்படுத்தும் கசிவினையும் உண்டாக்கி விடுகின்றன.

இரண்டும் கலந்த தொழுநோயில் முன்னே கூறிய

எல்லா பாதிப்புகளுமே ஏற்பட்டு விடுகின்றன. பார்வைக்கு ஒருவித அருவெறுப்பையும் உண்டு பண்ணி விடுகின்றன.

தடுப்புமுறை

1. நோயாளிகளைத் தனிமைப்படுதுத்த வேண்டும்.

2. நோயாளிகளிடமிருந்து அவர்களது குழந்தைகளை

அப்புறப்படுத்த வேண்டும்.

3. பாதிக்கப்பட்ட உறுப்புகளுக்கு உடனே மருத்துவம் செய்திடவேண்டும். உடனே மருத்துவரை அணுகவும்.