பக்கம்:நலமே நமது பலம்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


 - o டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இவற்றைத் தடுக்கவும் மாணவக் குழந்தைகளைத் தாக்காமல் தற்காத்துக் கொள்ளவும் பின்வரும் முறைகளைக் கையாளலாம். அவற்றை வல்லுநர்கள் 3 பிரிவாகப் பிரித்துக் காட்டுவார்கள்.

1. p Lo B60 Glosol imitsosu (Health Supervision).

2. 2 Lo B60& G860s. (Health Service).

3. p Losbeo GL1560601 (Health Instruction).

பள்ளிகளில் பரிசோதனைகள்:

1. ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு ஒருமுறை மாணவ மாணவியர்க்கு உடல்நலப் பரிசோதனை செய்து, அவர்களுக்கு ஏற்பட்ட குறைகளையும், நோய்களையும் மருத்துவர் குழு அறிவிக்க வேண்டும்.

2. தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்களைத் தீர்த்துக் கொண்டார்களா என்பதை மாணவர்கள் வந்து தெரிவிக்கச் செய்தும், பெற்றோர்களிடம் பேசியும், கண்காணிப்பையும் கவனிப்பையும் தொடரச் செய்திட

வேண்டும்.

3. மாணவ மாணவியரின் உடல்நலக் குறிப்புகள் பற்றிய பதிவுப் புத்தகம் (Register) ஒன்றையும் நிர்வகித்து வர வேண்டும்.

4. மாணவர்களுக்குப் பொறுப்புள்ள ஆசிரியர்கள்,

அவரவர்களுடைய பெற்றோர்கள் பற்றியும் பாரம்பரியம் பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்வது, தீர்மானமாக முடிவெடுக்கும் திறன்களை நல்கும்.