பக்கம்:நலமே நமது பலம்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 75

4.

முதலுதவி செய்பவர், நல்ல சாமர்த்தியசாலியாக இருந்தாக வேண்டும். விபத்துக்குள்ளானவர் என்று அவர் மேல் இரக்கப்பட்டாலும் அதே சமயத்தில் மனோதிடம் நிறைய உள்ளவராகவும் செயல்பட வேண்டும்.

இரத்தப் போக்கு இருந்தால் உடனே அதனை நிறுத்தி விடும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

நோயாளி மன அதிர்ச்சிக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளவும் தைரியம் கூறி அவரைத் தேற்றிடவும் வேண்டும். -

தேவையானால் ஆடை துணிகளை நீக்கிவிட வேண்டும் அல்லது இறுக்கம் இன்றித் தளர்த்திடவும் வேண்டும்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டு நோயாளி திணறுகிறபோது செயற்கை சுவாசம் மூலம் செய்விக்க வேண்டும்.

சுற்றிலும் கூட்டமாக உள்ளவர்கள் கண்டபடி ஏதாவது பேசி நோயாளியைப் பயப்படுத்தாமல், எல்லோருக்கும் நம்பிக்கை உண்டாகும்படி முதலுதவியாளர் தேறுதல் சொல்ல வேண்டும்.

பள்ளிகளில் முதலுதவிப் பொருட்கள்:

முதலுதவி செய்வதற்கென்று தனி அறை ஒன்றை

ஒதுக்கியிருப்பது சாலச் சிறந்தது. அதில் முதலுதவிப் பெட்டியும் பொருட்களும் இருந்தால் முதலுதவிக்குச் சிறப்பாக உதவும்.

பல நீள அகலத்தில் கட்டு கட்டும் துணிகள், முக்கோண

வடிவில் கட்டுத் துணிகள், பஞ்சு, கத்தரிக்கோல், சிம்புகள், தொட்டில் போலக் கைகட்டித் தொங்கவிடும் துணி, இறுக்கும்