பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


கொள்ளவும். காலையிலும் மாலையிலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கவும்.

கட்டு மாத்தத்தின் குணம்

வயிறு இரைந்து வலி எடுத்து குழந்தை அழும், சோர்ந்து விழும். தலை வலிக்கும். சுரமிருக்கும். அடிக்கடி கொட்டாவி விடும். வியர்வை எடுக்கும். கழியும்.

சுக்கு, கடுகுருரோகணி, சிவதைவேர், களிப்பாக்கு, சீந்தில்தண்டு, கடுக்காய் இவைகளைச் சமகிறை எடுத்துத் தட்டிக் கஷாயம் செய்து கொள்ளவும். காலையில் மூன்று தினம் கொடுக்கவும்.

விக்க மாந்தத்தின் குணம்

கைகால் கோகும். ஆகாரம் செல்லாது. காவு புண் ஆகும். சுரமிருக்கும். காதும், கண்ணும் வீங்கி வற்றும்.

கருஞ்சீரகம், சிறு குரிஞ்சான், சத்திச்சாரடைவேர், நீர் முள்ளிச்சாறு, வேளைவேர், பிரமியில், மருட்கிழங்கு, துண்துளே, முருங்கையிர்க்கு, பூவரசம் பழுப்பு, சங்கம் பட்டை, சீந்திற் கொடி, சுக்கு, ஓமம் இவைகளை சம அளவாகத் தட்டிகஷாயம் செய்து சங்களவு கொடுக்கவும்.

பால் மாந்தத்தின் குணம்

வயறு ஊதிப் புண்போல் வலி இருக்கும். புளித்த காற்றமுடன் மலம் கழியும். கண் வளையம் கட்டும். தொண்டையில் கோழை கட்டும். உண்ட பாலை உடனே வாக்தி பண்ணும். கை கால் வெதும்பிக் குளிரும்.

பொடுதலைக்காய், இந்துப்பு, வசம்பு, பூண்டு, மிளகு இவைகளை ஓர் கிறையாய் எடுத்து வெதுப்பிக் கியாழம் செய்து கொடுத்தால் தீரும். -