பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பித்த ஓட்டம் இருப்பின் தலைக்குத்தல் உண்டாகும். வெள்ளியன்று பித்த ஓட்டம் இருந்தால் கண்ணுேய், காதுநோய் இருக்கும். வியாழத்தில் தலைவலியுண்டாகும்.

வாதம் அதிகமானால்

வாதம் அதிகமானுல் உடம்பில் திமிர் உண்டாகும். அன்னம் சுருங்கும். நாவு புளிக்கும். உடலெங்கும் குத்தல் எடுக்கும். கை, கால் ஒரு பக்கம் முடங்கும். மலக்கட்டும், தாது நட்டமும் இருக்கும்.

பித்தம் அதிகமானால்

காவறட்சி, மண்டைக்குத்து, நடுக்கம், வாந்தி, விக்கல், நெஞ்செறிவு, குளிர்சுரம், அக்கினிமந்தம், கிறுகிறுப்பு, மூர்ச்சை, காதடைப்பு, அஸ்திரம், பாண்டு, காமாலை, மயக்கம், சோகை, பிரமேகம், கசப்பு இருக்கும். நீர் மஞ்சளாக இறங்கும்.

சிலேட்டுமம் அதிகமானால்

நீர் சிறுத்திரங்கும். வாய்நீருறும். உடல் காயும். குளிர்ந்து நடுக்கும். விக்கல், இருமல், திகைப்பு, வியர்வை, கூடியம், ஈளே உண்டாகும். நெஞ்சுவிலா கோகும். அன்னம் செல்லாது.

நல்லுடலுக்கு வாதம் ஒரு பங்கும், பித்தம் அரைப் பங்கும், சிலேட்டுமம் கால் பங்குமாக இருக்க வேண்டும். வாதம் எழும்பினுல் இனிப்பு நாவில் ஏறும். பித்தம் எழும்பினுல் கசப்பு நாவில் ஏறும். சிலேட்டுமம் எழும்பிளுல் இனிப்பு காவில் ஏறும். தேகம் குளிர்ந்தால் வாதம். சுட்டால் பித்தம். வியர்த்தால் சிலேட்டுமம்.