பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


-என்றான். அபு ஸிர் அவனிடம் அரிதில் விடை பெற்றுக் கொண்டு, வெளியே புறப்பட்டான்.

  அவன் கடைத் தெருக்களைச் சுற்றிப் பார்த்தான். அப்பொழுது ஒரு கடைத் தெருவின் வழியாக நடந்து செல்லுகையில், ஒரு பெரிய தொழிற்சாலையின் முன்னால் பல வண்ணங்க ளுள்ள துணிகள் தொங்கவிடப்பெற்றிருந்ததையும், அவைகளை ஜனங்கள் கூட்டமாக நின்று பார்த்துக்கொண்டிருந்ததை யும் அவன் கண்டான். அங்கே நின்ற ஒருவரிடம், "ஐயா, இது என்ன கடை ? இங்கே கூட்டம் நிற்பதன் காரணம் என்ன ?” என்று விசாரித்தான். அவர், "இதுதான் சுல்தானின் சாயத் தொழிற்சாலை: இதை அவர் அபு கிர் என்ற வெளிநாட்டார் ஒருவருக்காக அமைத்துக் கொடுத்திருக்கிறார். இங்கே புது நிறங்களில் துணிகளைச் சாயமேற்றி உலர்த்தும் பொழுதெல்லாம், நாங்கள் கூட்டமாக வந்து, அவைகளைப் பார்ப்பது வழக்கம். எங்கள் நகரில் இப்படிப் பல வண்ணங்களில் சாயம் காய்ச்சுவோர் இல்லை; அதனால் இவைகள் எல்லாம் எங்களுக்கு வியப்பாகவே இருக்கின்றன.’’ என்று சொன்னார். மேலும் அவர், அபு கிர் முதலில் நகரின் சாயக்காரர்களைச் சந்தித்ததிலிருந்து, அரசர் புதுக்கட்டடம் கட்டி, தொழிற்சாலை அமைத்து, மூலதனம் கொடுத்ததுவரை விவரமாக அவனுக்கு எடுத்துச் சொன்னார்.

அந்தச் செய்தியைக்கேட்டதில் அபு ஸிர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். அப்பொழுது அவன் பின் கண்டவாறு எண்ண மிட்டான்: 'நம் நண்பனாவது நல்ல நிலையில் இருக்கிறானே! சாயத் தொழிலில் அவன் வல்லவன். ஆண்டவன் அருளால் அவன் தொழிலிலே மேலான நிலைக்கு வந்தது நல்லதுதான். முன் அவன் பணத்தைக் கையாடிய குற்றத்தைக்கூட மன்னித்துவிடலாம்; எப்படியாவது தூக்கத்தை விட்டு, என்னை விட்டுப் பிரிந்து, தொழிலில் இறங்கினானே, அது போதும்! அவன் இதுவரை என்னை வந்து பார்க்கவில்லை. இவ்வளவு பெரிய வேலையை மேற்கொண்டிருக்கையில், அவனுக்கு வெளியே வர நேரம் எது ? அவன் வேலை இல்லாமல் என்னுடன் இருந்தவரை, நான் அவனை அன்போடு ஆதரித்து-