பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் யில் துளசியார் பட்டினம் என்ற ஊரில் இவ்வெளவையார் திருப்பெயரான் ஒரு சிறிய பழைய கோயிலிருப்பது கேட்கப்படுதலால் இவர் ஆண்டுப்போய் விண்ணுலகெய்தினரோ = H m --- என ஊகிக்கப்படுகிருர், இனி, இவர் ஒரூர்க்குச் செல்லும்போது இடைவழியில் வெயிலால் வியர்த்து வாடித் துவரப்பசித்து உணவின்றி வருக்கினராக, ஆங்குச் சென்ற ஆட்டிடையன் ஒருவன். அசதி என்பான், தானுண்டற்குக் கருதிக் கொணர்ந்துள்ள கெண்ணிாடுபுற்கையை இவர்க்கு உதவினன் அங்குன்றி பாராட்டி அவன்மேற் கோவைநூ லொன்றுபாடிச் சென்றன ரென்ப. இவர் அசதிமேற் கோவை பாடினர் என்பது,

  • ஒளவையார் கோவில், வளவனுற்றின் கீழ்கரையில் துளசியார் பட்டினம் என்ற ஊரி லுள்ளது. அவ்வூர் திருக்கடிககுளம், திரு விடும்பாவனம் என்ற ஆருக்குக் கீழ்த்திசையில் ஒருமைல் துரத்தி லுள்ளது ; தஞ்சை ஜில்லாக் திருத்தருப் பூண்டித் தாலூகாவைச் சார்ந்தது. அக்கோவி. லில் ஒளவையார் விக்கிரக மானது விருக்காப்பியவடிவாய் முகத்திரைந்து விளங்குகிறது. அதனுடன் இளம்பெண்னுருவமான விக்கிரகமும் ஒன்றிருக்கிறது. அதை உப்பை என்கிருர்கள். இக்கோவிலுக்கு அவ்வையார் மானியம் என்று சில நிலங்களும் பாத்தியங்களும் உள. கோவிலில், பிற்காலத்தில் விசுவலிங்கப் பிரதிட்டை நிகழ்ந்துள்ளது. அவ்விலிங்கம் ஒளவையார் விக்கிாக மிருந்த இடத்தில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. அது தெற்குப்பார்க்க சக்கிதி, ஆதிசைவரால் இரண்டுகால பூஜை நடைபெறுகிறது. ஒளவையார். விக்கிரகம், பெயர்த்து மற்ருெரு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கோவிலுக்கு வடமேற்கில் அரைமைல்துராக்தில் கொல்லன்திடல் என்று ஒரு மேடு இருக்கிறது. அகன்