பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் இவர், சோமண்டலஞ் சோழமண்டலம் பாண்டிய மண்டலம் தொண்டைமண்டலம் இந் நான்கிலும் அவற்றின் தலைநகர்களிலும் நெடுங்காலஞ் சரித்தனரென்பதும், இவர்காலத்துத் தொண்டைநாட்டிற் சான்ருேர் பல ரிருந்தனர் என்பதும் இவர் பாடியருளிய, 'வேழ முடைத்து மலைநாடு மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து- பூழியர்கோன் றென்டுை முத்துடைத்து தெண்ணீர் வயற்ருெண்டை கன்னடு சான்ருே ருடைத்து.' f வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவன்ற ன்ைமாடக் கூடலிற் கல்வலிது சோழ னுறக்கைக் கரும்பினிது கொண்டைமான் கச்சியுட் காக்கை கரிது.” என்னும் பாடல்களான் அறியப்படுவன. இவை ஒளவையார் பாடியன என்பது, 'அஞ்சொன் முதுதமிழ் நால்வேந்தர் வைகு மவையிலெளவை செஞ்சொற் புனேகின்ற வேளாளர் வைகுஞ் சிறப்புடைக்கால் விஞ்சிய வேழ முடைத்தென்னும் பாடல் விளம்பிப்பின்னும் வஞ்சி வெளிய வெனும்பா மொழிகொண்டை மண்டலமே.” எனவருக் கொண்டைமண்டல சதகச் செய்யுளானும் தெளியப்படும். கச்சினர்க்கினியர், வெண்பாட் டீற்றடி முச்சீர்த் தாகும் என்னுஞ் சூக்கிரவுரையில், ! வஞ்சி வெளிய குருகெல்லாம்...... காக்கை களிது. இவை ஒளவையுங், காரைக்காலம்மையுங் கூறியன எனக்கூறியதனனும் இதனை யுணர்க. இனித் தமிழ்நாவலர் சரிதைக்கண், பொய்யாமொழி. யார் பாதியும் ஒளவையார் பாகியுமாகப் பாடிய வெண்பா என்னுங் கலைப்பின்கீழ்,