பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் பட்டவாற்ருல், இம்மகளிர் நல்லிசைப் புலவராதல் உணரப்படும். பாரிமகளிர் இருவர் என்பது மேலே தேறப்படுமாதலின், இண்டும் பாரிமகளிர் பாடியது' எனப் பொதுப்படக் கூறப்பட்டமைபற்றி அவ்விருவருமே செந்தமிழ்ப் புலமையிற் சிறந்தாரவரென்பதுக் ெ களியலாகும். புலவரிருவர் சேர்ந்து ஒருபாடல் பாடுவது முன்வழக்கே. இம் மகளிரது இன்றமிழ்ப்புலமை, கம கரும்பெறற் றங்கையாகிய வள்ளற்பாரிக்கு ஆருயிர்க்கோழராகிய கபிலரென்னும் புலவர்தலைவர்பாற் பெற்றதாகும். இதன்மேற் கபிலர், அவ்வூரை விடுத்து இளவிச்சிக்கோ என்பானிடஞ் சென்று இம்மகளிரது உயர்குடிப்பிறப்பு முதலியவற்றை எடுத்துரைத்து, இவர்களே மணஞ்செய்து கொள்ளும்படி அவனைப் பாடி வேண்ட, அவன் உடம்படாமையால் இருங்கோவேள் என்பானுழைச் சென்று அவனேயும் அவ்வாறுவேண்ட, அவ னும் அங்ங்னமே உடம்படாளுய் மறுக்க, இதற்காக அவனே முனிச்தபாடி, பாரிகுடிக்கும் மூவேந்தர்க்கும் உண்டாகிய பகைமைபற்றி அரசரொருவரும் இவர்களே மணஞ்செய்துகொள்ள இயையாமையாற் கபிலர் அம்மகளிரைத் தமக்கினிய பார்ப்பார் சிலர்பாற் படுத்து, பாரியின் பிரிவாற்ருது வடக்கிருப்பா ராயினர். இதற்கிடையிற் கபிலர் செல்வக்கடுங்கோவாழி. யாகன் என்னும் சோமான்பாற்சென்று அவனைப் பத்துப் பாடல்களாற் புகழ்ந்துபாடி, நூருயிரங்காணமும் அவன் யேறிக் கண்டு கொடுத்த நாடும் அவன்பாற் பெற்றனர் எனத் தெரிவது. இதுவே பதிற்றுப்பத்தினுள் ஏழாம் பத்தாவது. இவர் பாரி இறந்தபின்னேதான் அவனது நற்குணநற்செயல்கள் செல்வக்கடுங்கோவாழியாக னிடமும் இருப்பனவாகக் கேட்டு, அவனைக் காணச் சென்றனராவர். இதனே,