பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பாரி மகளிர் 69 (எ) கலையுணக்..........பாலே.' (புறம், உங்க) வேள்பாரி துஞ்சியவழி மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது. என வருவனவற்ரும் பாரிமகளிர் ஒருசிலரென்பதும், அவர் பாடவல்லவரென்பதும், அப் பாரி இறந்தபின் அவனது தோழராகிய கபிலரென்னும் புலவசந்தணரால் இளவிச்சிக்கோ, இருங்கோவேளென்னும் அரசரிடம் தம்மை மணஞ்செய்து கொள்ளும்படி வேண்டப்பட்டனரென்பதும், அவ்வாசர் அகற்குடம்படாமையாற் கபிலராற் பார்ப்பார்ப் படுக்கப்பட்டனரென்பதும், இவரைப் பார்ப்பார்ப்படுத்தபின் கபிலர் பாரிபிரிவாற்ருது வடக்கிருக்தன்ரென்பதும் அறி. யப்படும். இனித் தமிழ்நாவலர்சரிதையினையும் துணைக்கொண்டு நோக்கின், சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவ லூாளவுக் கான்வருக வுட்காதே - பாரிமக ளங்கவையைக் கொள்ள வரசன் மனமியைந்தான் சங்கியா தேவருக தான்.' என்பன முதலாக மேல் ஒளவையார் வரலாற்றுள் எடுத்துக்காட்டிய பாடல்களானும், பிறவற்ருனும் அப் பாரி. மகளிர் அங்கவை சங்கவை என்பாரிருவரென்பதும், அவர் திருக்கோவலூரில் இருந்தனரென்பதும், அவ்வூரில் தெய். விகனென்னும் அரசனுக்கு மூவேந்தர்நடுவில் ஒளவையாருடைய நன்முயற்சியாற் சிறக்க மணஞ்செய்து கொடுக்கப்பட்டன. ரென்பதும், பிறவும் புலகுைம். இத்தழிழ்காவலர்சரிதைப் பாட்டுள், பாரிமகள், அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைக் கான் என்பது, முன், அரசர்சில்ர் இம். மகளிரைக் கொள்ள ம்னமியையாமை குறிப்பதாம். இதன் விரிவெல்லாம் ஒளவையார் வரலாற்றுட் காண்க.