பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. நல்லிசைப் புலமை மெல்லியலார்கள 7. குறமகள் இளவெயினி இவர் குன்றுறை வாழ்க்கைய ாகிய குறவர்குடியிலா ராவர். விற்றுாற்று மூதெயினனர் (அகம்-கூஎ), இளவெயினனர் (நற்றிணே-உசுங்), கடுவன் இளவெயினனர் (பரிபாடல்) என ஆண்பாற்கண் வருதல்போல, இளவெயினி எனப் பெண்ப்ாற்கண் வந்ததாகும். குறமகள் குறியெயினி என்னும் நல்லிசைப் புலமை மெல்லியலார் ஒருவருளரென் றறியப்படுதலால், இவர் அவர்க்கிளையாாதல் பற்றி இளவெயினி என வழங்கப்பட்டனரெனக் கொள்ளலுமாம். இவர் கம் குறவர்குடிக்குக் தலைவனப்ச் சிறந்த ஏறை என்பானேக் :தமர்தற் றப்பின்’ என்னும் புறப்பாட்டாம் (கடுஎ) புகழ்ந்து பாடினர். அப்பாட்டால், அவ் வேறைக்கோன், கன்னிற் சிறந்தோர் தனக்குத் தவறிழைப்பின் அதனைப் பொறுக்கஅம், பிறருடைய வறுமைக்குக் கான் கா அகலும், படை யிடத்துப் பிறராற் பழிக்கப்படாக வலியுடையணுகலும், அரசுடை அவையத்து ஓங்கி நடக்கலும் இயல்பாகவே பொருந்தினேன் என்பதும், குறவர்கலேவன் என்பதும், காந்தட்பூவாற் செய்க கண்ணியை யுடைய னென்பதும், பெரிய மலைநாடுடைய னென்பதும் அறியப்படுவன. வந்து வினை முடிந்தனன் என்னும் அகப்பாட்டான், எறை என்பான், சோன்படைத்தலைவருள் ஒருவகை அறியப்படுதலால், இவனது பெருங்குன்றநாடு சேரநாட்டின்கண்ணதாகு மெனக் கருதப்படுவது. இந் நல்லிசைப் புலமை மெல்லியலாரும் அச் சோகாட்டாரே யாவர்.