பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசிராந்தையார் 1??

கேளில் வந்து கண்டறியாரே ! பல காலம் கன்கு பழகிய கட்புரிமையுடையவர்களும் இங்ங்ணம் வருதல் அரும்ை யாவிற்றே ' என்று கூறினர்கள். அதனேக் கேட்ட அரசன் அவர்களே கோக்கி, பெரியீர், அங்ங்ணம் சிறி தும் விேர் ஐயுறல் வேண்டா : பிசிராங்தையார் என்னே என்றும் இகழ்ந்தறியார் ; அவர் இனிய குணக் குன்று: புகழை அழிக்கும் பொய்க்குப் பகை: மெய்க்கு அணி: புகழின் வாழ்வு; உறுதியான நட்பிற்கு இலக்கு. தமது பெயரைப் பிறர்க்குச் சொல்லும் பொழுது, எனது பெயர் சோழன், என்று பேதையாகிய எனது பெயரையே தமது பெயராகச் சொல்லும் பேதமற்ற அன்புரிமையுடையவர். என்பால் செல்வமுள்ள காலத்து வாராது கிற்பினும், துன்பமுறுங்காலத்து வாராதிரார். இஃது உண்மை கட்பாளரது இயற்கையன்ருே அவ்ர், பலகாத தாரமுள்ள பாண்டி காட்டுப் பிசிர் என்னும் ஊரில் வசிப்பவரேனும், இன்னே வருவது ஒருதலை : அவருக்கும் என்னேடு. வடக்கிருக்க இடம் ஒழித்து வையுங்கள்,” என்று கூறினன். இதனைக் கேட்ட சான் ருேர் அனைவரும், 'ஈதென்னே புதுமை' என வியந்து, அங்ஙனமே இடமொழித்து வைத்தார்கள்.

அவ்வளவிலே பிசிராங்தையார் தம் உயிர் கண் பனை சோழனுக்கு நேர்ந்தவற்றையும், அவன் துறவு பூண்டு வடக்கிருத்தலேயும் ஒத்த உணர்ச்சி விசேடத் தால் அறிந்து, புறப்பட்டு வந்தவர், அரசன் சொல்விய வாறே குறித்த நேரத்தில் அவனெதிர் வந்து கின்றார், யாவரும் வியந்தனர். அவர்களுள் சோழனுக்கு ஆங்தை யார் போலச் சிறந்த நண்பரான பொத்தியார் என்ற புல வர் ஆங்கிருந்தவர். இதனக்கண்டு வியப்புற்று,"கின்த் தால் வியக்குக் தன்மையுடையது, இவ்வரசன் அரசசெல்