பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒனவையார் 籃魏器

பின்னர் இவர். தம் குல வாழ்க்கையாகிய பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டு, நம் தமிழகத்தில் கியாங் மும் தியாகமும் வீரமுமிக்க திருவுடை மன்னர் அவைக் களக்தோறுஞ் சென்று, தம் புலமைத் திறலேயும், ஆடல் :பாடல்களின் விறலேயும் வெளிப்படுத்தி, அவர்கள் மன முவந்தளிக்கும் பெருஞ்செல்வங்களைப் பெற்று,வாழ்த்து வருவாராயினர்.

இவர் காலத்தில் சேரகாட்டின் ஒரு பகுதிக்கண் விளங்கிய தகடுர் என்னும் ஊரில் அதியமான் தெடு மானஞ்சி என்னும் ஒர் அரசன் அரசு செய்திருந்த னன். அவன் சேரர் உறவினன் ; கடையெழு வள் ளல்களுள் ஒருவன் . வீரமிகுந்தவன்; மழவர் என்னும் ஒரு வகை வீரர்கள் அடங்கிய படையையுடையவன் : சிற்றரசரும் பேரரசருமாகிய ஏழரசர்களை வென்று, அவர்களை வென்றமைக்கறிகுறியாக அவர்களது கொடி முதலாகிய ஏழிலாஞ்சனேயுமுடையவன். அவன் இவ் விதச் சிறப்புக்களோடு வண்மை மிகுந்தவளுய் விளங்கு வதையறிந்த ஒளவையார், அவனிடத்துப் பரிசில் பெறக் கருதி, அவனது தகடூரை அடைந்து, அவனைப் புகழ்ந்து பாடினர். அவன் இவர்மீது பேரன்பு காட்டி உபசரித்துவிட்டுப் பரிசில் அளித்தால் இவர் இவனின்று அகன்றுவிடுவாராகையால், இவ ரைப் பிரிய நேரிடும், எனக் கருதிப் பரிசில் அளியாது, சின்குள் தாழ்த்திருந்தனன். ஒளவையாரும் சின்ளுள் அவனது அரண்மனைக்கண் தங்கியிருந்தவர், அவன் பின்னரும் பரிசிலளியாது காலம் நீட்டிப்பது கண்டு பொருது சினம் மிகுந்து, அவனே கேரிற்பார்ப்பதற்கும் இசையாது, அவனது வாயிற்காவலாளனிடத்துச் சில கூறிவிட்டுச் செல்லுதற்குக் கருதி, காவலாளனே கோக்கி,