பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

憩 நல்லிசைப் புலவர்கள்

தான்ியத்தை விளைவிக்கும் மன வலியுடையவர்களும், மேம்பாடு பெறுதற்கே வருந்துகின்றவர்களுமான இப் பரிசில் வாழ்க்கையுடைய பரிசிலர்க்கு அடையாத வாயி லேக் காப்போய், குரிசிலாகிய நெடுமானஞ்சி, தான்் தன் தரம் இத்தன்மையது என்று அறியானே? அதனே அறி யாவிடினும், எம் தரத்தையேனும் அறியான்கொல் லோ இவ்வுலகம், அறிவும் புகழுமுடையோர் அனேவ ரும் இறக்தொழிந்தாராக, வறிய இடத்தையுடைய தாகிவிடவில்லையே! ஆகலான், இப்போதே புறப்படு கின்ருேம்; எமது யாழ் முதலான கருவிகளே மூட்டை யாகக் கட்டித் தூக்குகின்ருேம் இவனன்றி எங்கட்கு இல்லையோ இடம் : எத்திசைச் செல்லினும், அத்திசை யில் எம்மை அன்போடு உபசரித்துச் சோறிடுவார் பலரு ளர். இதனே தும் அரசனுக்குக் கூறிவிடுவாயாக,” என முனிவுடன் மொழிந்துவிட்டு, அறிவும் புகழுமுடையா ரிடத்துப் பரிசில் பெறுதற்கு விரைந்தெழுந்தார்.

இங்ங்ணம் இவர் சினவிக் கூறிச் செல்லுதலே வாயில் காப்போல்ை அறிந்த அதியமான் அஞ்சி, இவர் முனிவுக்கு அஞ்சி, விரைந்து வந்து இவசைக் கண்டு, இவர் கொண்ட கோபங் தணிய வேண்டிகின்று, தனது கொடை மன்றத்துக்கு அழைத்துச் சென்று, வீற்றிருக் கச்செய்து, வரிசைமிக்க பரிசில் அளவு கடப்ப அளித்து, உணவிற்கு கெல்லும் சிறந்த ஆடைகள் பலவும் கொடுத்துபசரித்தான்். உடனே ஒளவையார் உவந்து, “இத்தகைய வண்மையாளனைப் பரிசில் நீட்டித்தா னென்று முனிக்கோமே!” என்று இரங்கித் தம் மனத்