பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16) நல்லிசைப் புலவர்கள்

சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் உக்கி சப் பெருவழுதியும் வந்து, அச்சோழைேடு ஒருங்கமர்க் திருந்தனர். ஒளவையார், அடிக்கடி தம்முள் பகைமை கொண்டு பெரும்போர் நிகழ்த்தும் தமிழ்ப் பெருவேக்தர் மூவரும், அவ்வேள்வியின் முத்தீயைப்போல ஒத்த மன முடையவராய் ஒருங்குகூடி இருப்பதைக் கண்டவுடன், இவர்தம் உள்ளத்தில் உவப்பும் வியப்பும் பொங்கி எழுந்தன. எழலும், தேவ லோகத்தையொத்த பகுதிப்பட்ட காடு தம்முடையதாயினும், அஃது எப்போதும் தம்மோடுரிமைப்பட்டே நடவாது; ஒருவர் அங்காட்டுக்கு உரியரல்லராயினும், கற்றவம் செய்தோ ராயின், அஃது அவர்க்கே உரியதாகும். ஆகையால், விேர், யாசித்த அறவோரது கைக்கிறையப் பூவையும் பொன்னேயும் தாரை நீரோடு சொரிந்து, இரப்போர்க் குச் செல்வங்களேக் குறையாது வழங்கி, உங்களுக்கு அறுதியிட்ட வாழ்நாள் முழுதும் வாழ வேண்டும்; கற் கருமமல்லது பிறவிப் பெருங்கடலேக் கடப்பதற்கேற்ற புனே வேறில்லை ; ஐம்புலன் ஒடுங்கிய அந்தணர் வேள் வியில் வளர்க்கும் காருகபத்தியம், ஆகவநீயம், தென் றிசையங்கி என்னும் முத்தீயையும் போல ஒருங்கு சேர்ந்து அழகு மிகவிருந்த கொற்ற வெண்குடை கிழற் றும் கொடித்தேர் வேந்தர்களே, இங்கனம் நீங்கள்கூடி யுறைதலால் உண்டான பெருமையும், பயனும், உலக நன்மையும் யான் அறிந்துரைக்கும் அளவினையுடையன வாமோ? உங்களது வாழ்நாள் வீண் மீனினும், மழைத் துளியினும்மேம்பட்டுப்பெருகுவதாக!' என வாழ்த்தி ஞர். அம்மூவேந்தரும் நம் மூதாட்டியாரைப் பெரிதும் உபசரித்தனர். பிராட்டியாரும், இராசசூய வேள்வி

1. புறம், கி?ே. ---