பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 16}.

முற்றும் வரை அங்குத் தங்கியிருந்து, சோழன்பால் பெரும் பரிசில்கள் பெற்றுச் சொழ நாட்டு வெண்ணி, அம்பர் முதலான பலவூர் கட்கும் சென்று, வள்ளியோர் பலருடைய நன்மதிப்பினேயும் கண்புரிமையினையும் பெற்றுச் சோனடு விட்டுப் பாண்டி நாடு நோக்கிப் புறப்பட்டு வநதார். வந்தவர், வேளாவிக் கோமான் பதுமன் முதலான ஆவியர் குடியினர் நகரமாகிய ஆவிநன்குடி என்னும் சித்தன் வாழ்வை அணுகி, அங்குக் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானைத் தொழுதும், ஆண்டுறையும் அந்தணச் சான்ருேருடன் பழகியும் சின்னுளங்குத் தங்கினர். பின்னர், செந்தமிழ்ப் பாண்டி காட்டின் தலே நகரமாகிய பீடு மிக்க மாட மதுரையைக் குறுகி, ஆண்டு அரசு செய்திருந்த பாண்டி யன் உக்கிரப் பெருவழுதியையும் அவனுல் இனிது புரக் கப்படும் சங்கத்துட்குழுமியிருக்கும் பழுதில் கேள்வி முழுதுமுணர்ந்த நல்லிசைப் புலவர் பல்லோரையும் கண்டு மகிழ்ந்து, அவரோடு அளவளாவி இருந்தார். தாம் பழகிய தமிழ் நாட்டுள் எல்லாம் வழங்கப் பெருத செந்தமிழ் மொழியின் அழகிய வழக்கை அங்குக் கண்ட மையான் வியந்து, ஏனேய இடங்களிற்கண்ட கலன் களையும் இக்கலனேடியைத்து, சண்டிய புகழ் சேர் பாண்டியர் கோவை கோக்கி, 'நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன் வாழ் வில்லந் தொறுமூன் தெரியுடைத்து-நல்லாவப் பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டிய நின் குட்டுடைத்து நல்ல தமிழ். என்னும் பாடலைக் கூறினர்.

இங்ங்னம் அரசனும் புலவரும் உவக்குமாறு செஞ் சொற்கவிகள் பல பாடி வேத்தவை ஏத்த விளங்கி

Þ Í