பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£2. நல்லிசைப் புலவர்கள்

யிருந்த ஒளவையார், பின்னர்த் தமிழ் நாட்டுள் பல விடங்கட்கும் செல்லுதற்கு விரும்பி, அரசனிடத்தும் புலவரிடத்தும் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டுச் செல்வாராயினர். இங்ங்ணம் சென்றுகொண்டிருக்கும் போது சில புல்லியோர், ஒளவையார் வாயாற் பாடல் பெற வேண்டுமென விருப்புற்று, இவரிடத்து வந்து, எங்களைப் பாட வேண்டும், எனக் கேட்டுக்கொண் டனர். அறிவும், செறிவும், புகழுமுடைய மூன்று பெருங்கோக்களையும், அவர் இளங்கோக்களையும், அன் பும், அருளும், அருமையும் மிகுந்த பெருவள்ளல்களே யுமே பாடிய தமது செக்காவால் இவர் அவரைப் பாடு தற்கு இசைவரோ மன வலியும் சொல் வலியும் மிக்கல சாகையால், பிராட்டியார் அவர்களை நோக்கி,

மூவர் கோவையும் மூவிளங் கோவையும் பாடிய வென்றன் பனுவல் வாயால் ‘எம்மையும் பாடுக, என்றளிைர்;

நூம்மையிங் கெங்கனம் பாடுகென் யானே! களிறுபடு செங்களம் கண்ணிற் காணiர்; வெளிறுபடு நல்லியாழ் விரும்பிக் கேளிர்; புலவர் வாய்ச்சொற் புலம்பலுக் கிரங்கீர்; அவிழ்ச்சுவை யல்லது தமிழ்ச்சுவை கொள்ளீர்; உடீஇர்; உண்ணிர்; கொடி இர்; கொள்ளீர்; ஒவாக் கானத் துயர்மசம் பழுத்த துல்வாக் கணியெனத் தோன்றிய நீசே." என்று இழித்துக் கூறிவிட்டுச் சோணுடு, தொண்.ை காடு, சேர நாடு முதலிய தமிழ் நாடெங்கும் சென்று, பெருவேந்தரையும் வள்ளல்களையும் அறவுரை செறிந்த பாடல்கள் பாடி மகிழ்வித்துப் பின் தம் கண்பருள் ஒருவயை பாசி, மூவேந்தர் சூழ்ச்சியால் இறந்து பட்ட