பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 153

பின்னர் அவன் உயிர்த் தோழராகிய கபிலரால் அழைத்துக்கொண்டு போகப்பட்டு வேளிருட்சிறந்த இருங்கோவேள் முதலியோர்பாற்சென்று மணம் புரிய வேண்ட அவர்கள் மறுத்தனராகப் பின்னர்த் திருக்கோவலூர் சென்று, தமக்கினிய பார்ப்பார் சிலரது பாதுகாவலில் வைத்திருந்த பாரியின் மகளிரைக் காணு தற்கு விரும்பி, ஆங்குச் சென்று, அவர்களேக் கண்டு, அவர்கள் கிலேமைக்குப் பெரிதும் வருந்தினர். அவர் கள் கல்லிசைப் புலமை மெல்லியர் ஆகையானும், முல் இலக்குத் தேரீந்த வள்ளியோன் மக்களாதலானும், தங்க சால் முன்னரே நன்கறியப்பட்ட இவர்க்கு அன்றிரவு இலக்கறி உணவிட்டனர். அன்புடையாரிட்ட அவ் வுணவை உண்டு மகிழ்ந்து, ஒளவையார்,

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய் தேய்தான்் அளாவி நிறையிட்டுப்-பொய்யே அடகென்று சொல்லி அமுதத்தை யிட்டாள் கடகஞ் செறியாதோ கைக்கு." என்று புகழ்ந்து பாடி, அவர்கள் கன்னிலே பெறுவதற் குரிய முயற்சிகளே எல்லாம் செய்து, ஆங்குத் தங்கியிருந் தனர். இருக்குங்கால் தாம் சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம், தொண்டை மண்ட லம் ஆகிய நான்கிலும், அவற்றின் தலே நகரங்களிலும் பன்முறை பல நாள் பழகியவராதலால், அவ்வங்காடு நகரங்களின் சிறப்பியல்புகளையெல்லாம் தொகுத்து,

வேழ முடைத்து மலைநாடு; மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து ;-பூழியர்கோன் தென்னுடு முத்துடைத்து, தெண்ணீர் வயற்ருெண் தன்னுடு சான்ருேம் உடைத்து. fடை