பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 நல்லிசைப் புலவர்கள்

வதியமானுர்ரில் பன்னெடுநாள் இருந்தவரென்பதை நன்கு காட்டத் தக்கவையாய் விளங்குகின்றன. இத் தகடூர், மைசூர் காட்டில் இருந்ததென்று ஒரு சா ரும் : கொல்லிக் கூற்றத்திலிருந்ததென்றும், இது கக் காலத்துக் கொங்கு நாட்டுத் தரும புரியே என்றும்’ மற்றொரு சாராரும் துணிகின்றனர். மைசூரின் கண்ணே யிருந்ததென்பார், அங்கு இன்றும் தகடுர் என்னும்பெய ரோடு ஒர் ஊர் இருத்தலையும், வேறு சிலவற்றையும் ஆதாரமாகக் காட்டுவர். பின்னேய கொள்கையினர்,

கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப் பல்வேற் ருனே யதிக மானெ (டு) இருபெரு வேந்தரையு முடனிலை வென்று." என அதியமானெடு பெருஞ்சேரல் கொல்லிக் கூற்றத தில் போர் செய்ததாக வரும் பதிற்றுப் பத்துப் பதிக அடியையும், சாதலே நீக்கும் என்ற 43-ஆம் கொங்கு மண்டல சதகச் செய்யுளேயும் சான்ருகக் காட்டுவர். மேற்காட்டிய பதிற்றுப்பத்தடியிலும், கொங்கு மண் டல சதகச் செய்யுளிலும், அதியமான் பெயரன்றி, அல்: னது ஊரின்பெயர் வெளிப்படையாகக் கூறப்படவில்லை, கொல்லிக் கூற்றம் சேரர் பரம்பரையினர்க்குரியதெனத் தொன்னூல்களால் அறியப்படினும், அதியமான் காலத தில் இது வல்வில் ஒளிக்கு உரியதென்று புறநானூறு அகநானூறு முதலிய சங்க நூல்களின் செய்திகொண்டு அறியப்படுதலால், இக்கொல்லிக் கூற்றத்தில் அவனது தகடூர் இருந்ததென்ற கொள்கை கேரிதாகத் தெரிய 1. புறநானூற்றுப் பதிப்பில் வி. வெங்கையாவர்கள் குறிப்புப் பார்க்க.

3. கற்றினே, பாடப்பட்டோர் வரலாறு (பக்.82.1 3. கொங்கு மண்டல சதகம் பதிப்பாசிரியர்,