பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}# நல்லிசைப் புலவர்கள்

தருள வேண்டுமென்பது எற்றுக்கு : இப்போது 燈 என்ன காட்டிற்கழைப்பதே பெருந்துன்பம் தரும் செயலாய் இருக்கின்றது," என்று கூறினன்.

அது கேட்ட இளங்குமணனும் கமர மாந்தரும் புல் வரது திருமுகத்தை ஒரு முகமாய் நோக்கி நின்றனர். புலவர் குமணனைப் பார்த்து, * தலைக்கொடையாளியே, உனக்கு இத்தலேயில்யாது உரிமையுளது? இது என்தலை, இதில் முடி புனேய நான் நினைத்தால், அதற்கு யாகி தடையுளது ?" என்று குமணன் மறுக்கலாகா வகை திறம்படவுரைத்துத் தம் கருத்தை வெளிப்படுத்திர்ை. குமணன் புலவர் திருவாக்கை மறுத்தற்கஞ்சி, தோன்ருத் துணையாய் கின்றியக்கும் இறைவன் திரு விளயாடல் இருந்தவாறென்னே !” என உன்னி, இரு வர்தம் வேண்டுகோட்கும் இணங்கின்ை. கவியரசர் அரசரிருவருடன் காட்டினின்றும் போந்து, ககரத்துட் புகுந்து, குமணனை அரசு கட்டிலில் அமரச் செய்து, தமது திருக்கரத்தால் மணி முடியை எடுத்தணிந்தார். ஊரினர் யாவரும் உவகைக் கடலுள் மூழ்கித் திளைத் தனர். இளங்குமணன் குமணனது குறிப்பின் வழி கின்று, அவனிட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு ஒழுகுவதே தனக்குப் பெரும்பேருகக் கொண்டான். நாடு பண்டுபோல வசி வளஞ்சிறந்து, பசிப்பிணி இன்றி வளமுற்றுத் திகழ்ந்தது. .

பின்னர்க் குமணன் புலவரது அளக்கலாகாத அறி வாற்றலுக்கும், அருட்பெருங்குணத்துக்கும் வியந்து மகிழ்ந்து, அவர்தம் கரங்களே அன்புடன் பற்றி அழைத் துச்சென்று, கிதிச் சாலையைக் காண்பித்து, ' புலவரே, இவையனைத்தும் உமவேயாகும் . ஆகையால், வேண்டு வன வேண்டுவன விேர் எடுத்தருள்க,' என்று கூறினன்.