பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்த ஞர் 丑官

புலவர், அரசே, கின் பொற்கரத்தால் கொடுப்பது எதுவோ, அதுவே எனக்குச் சாலும்,” என்றுரைக்கக் குமணன், புலவர் போதும் ! போதும் ' என்று மறுக் கும்படி பொன்னும், மணியும், மதமாவும், பரி மாவும் வழங்கித் தன்னுட்டிற்சிறந்த விளைபுலங்கள் பலவற் றையும் முற்றுாட்டாக அளித்தனன்.

புலவர் அவற்றையெல்லாம் பெற்று மகிழ்ந்து, தமது ஊருக்குச் செல்லும் விருப்பைக் குறிப்பித்து, அரசனிடம் விடை வேண்டினர். அவன் புலவர் பிரி வுக்கு வருந்தி, அரிதில் உடன்பட்டுப் புலவரை நோக்கி, * புலவீர், அடிக்கடி எனது காளோலக்கம் நுமது திரு முகக் காட்சியைப் பெறுமாறு அருள் புரிய வேண்டும்!" என வேண்டி, ஏழடி பின் கடந்து விடையீந்தான்். புலவர் பொற்குவியலோடும், ஏனேய வரிசைகளோடும் சிவிகை ஊர்ந்து, தமதுாரை அடைந்து, மனைவி மக் களைக்கண்டு, மகிழ்வு பூத்து, வறுமைப் பிணி ங்ேகி, இன்புற்று வாழ்ந்திருந்தார்.

இங்கனம் தம் பதியில் இன்புற்று வாழ்ந்திருந்த சாத்தனுர், சின்னுட்கழிந்த பின்னர், பழுதில் கேள்வி வழுதியராைேர் தமது பழவிறல் மூதாராகிய மதுரை யம்பதியில் வழி வழி கிறுவிப் புரந்து வரும் தமிழ்ச் சங் கத்தில் கனமாப் பலகைமீதமர்ந்து செந்தமிழாராய்ச்சி செய்து வரும் தண்டமிழ்ப் புலவர்களைக் கண்டு களிப்ப தற்கு விருப்புற்று, அம்மதுரைமாககரையடைந்து, அத் தமிழ்ப் பேரவையைக் குறுகினர். குறுகலும், அத் தமிழ்ப் பேரவையிற் சிறந்து விளங்கும் கூலவாணிகஞ் சாத்தனர், நக்கீசர் முதலிய புலவர் பெருமக்கள் இப் புலவரது புலமையையும் இவர்தம்தந்தையார்மூலங்கிழா ரது பெருமையையும்கன்கறிந்தவராகலின், இவரது வரு

Ž