பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 நல்லிசைப் புலவர்கள்

செல்கின்ருரென்று தெரிந்து அச்சமுற்று,"ெ தால்லான கல்லாசிரியர் திறத்தில் என் செய்தோம் ! என்று தன் பிழைக்கு வருந்தி, அது பொறுக்குமாறு புலவரைத் தொடர்ந்து சென்று வேண்டி அழைத்து வந்து, அவர்க் குப் பொற்குவியலும் யானைச் செல்வமும் மிகக் கொடுத்து உபசரித்தான்். உடனே புலவர் அவனது கொடையை வியந்து, அவனது தெய்வ சிக்தனையும்,வலி யும், தெறலும், அளியும், வண்மையும், செல்வமும் எல் லாங் தோன்ற ஓர் அகப்பொருட்செய்யுளில் உவமை முகத்தான்் வைத்துப் பாராட்டிக் கூறினர். பின்னர் விடைபெற்று, அவனின்று நீங்கிப்புறப்பட்டுப் பாண்டி காடு கடந்து, சோனடு புகுந்து, தம்மூராகிய ஆவூரை அடைந்து, ஆங்குள்ள சான்ருேருக்குத் தாம் சென்ற சென்ற இடக்தோறும் கண்ட கண்ட வனப்பினையும் விசேடச் செய்திகளையும் சங்கத்துச் சான்ருேசது துங்க மிகுந்த குணநலங்களையும் கூறி அமர்ந்திருந்தார்.

பின்னர் ஒரு நாள், புலவர் கடையெழு வள்ளல் களுள் ஒருவனும் தோட்டிமலைக்குரியவனும் பரிசி லர்க்கு யானைக்கொடை வழங்குபவனுமான கண்டிாக் கோப்பெருநள்ளியின் தம்பி இளங்கண்டிரக்கோ என் பவனேக் காணுதற்கு அவனிடத்துச் சென்றார். அவ்வம யம் அவ்விடத்து நன்னன் என்னும் வேளிர்குலத் தலே வன் வழித்தோன்றலாகிய இளவிச்சிக்கோ என்பவனும் வந்து, ஒருங்கு அமர்ந்திருந்தான்். சென்ற புலவர் இளங் கண்டீரக்கோவை மாத்திரம் தழுவி மகிழ்ந்து அள வளாவிவிட்டு, இளவிச்சிக்கோவைத் தழுவாதிருந்தனர். இதனேக்கண்ட இளவிச்சிக்கோ காணமடைந்து, புல வரை நோக்கி,'புலவர் பெருமானிர்விேர் என்னைமட்டும்

1. அகம். 18.