பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நல்லிசைப் புலவர்கள்

பெண்கோலே புரிந்த நன்னன் போல வகையா திசயத்துச் செலீஇயரே ' எனப் பரணரும்,

இருடிச் மணிவிளக்கத் தேழிலார் கோவே ! குருடேயு மன்று நின் குற்றம் --மருள்தீர்ந்த பாட்டு முசையும் பயிலா தனவிரண்டு; ஓட்டைச் செவியு முள.' என ஒளவையாரும், முனிந்து பாடியுள்ளார்கள், ஆகை யால், அங்காள் முதலாக உங்கள் மலேயை எம்மவரான பெரும்புலவர் பாடுதல் ஒழிந்தனர் ; இதுவே உன்னே யான் தழுவாதொழிந்ததற்குக் காரணம்,” என்று பெருமிதத்துடன் விடை பகர்ந்தார். பின்னர் இளங் கண்டீரக்கோ, புலவர்க்கு வரிசைகள் பல நல்கினன். புலவர் அவற்றை மகிழ்ந்து பெற்றுக்கொண்டு, தம் பதி வந்து தங்கினர்.

பின்பொருமுறை மூவன் என்னும் சிற்றரசனிடம் புலவர் பரிசில் கடாவிச் சென்றிருந்தனர். அவன் புல வர்க்கு உபசரித்துப் பரிசில் கொடாது காலக் தாழ்த் தனன். அது கண்டு புலவர் முனிந்து, அவனுக்கு கல் லறிவு கொளுத்தக் கருதி. பொய்கைக்கண் மேய்ந்த காரை கெற்போரின்கண்ணே உறங்கும் நெய்தற் பூக்களே யுடைய வயலின்கண் விளைந்த கெல்லே அறுக்கும் உழவர் கள், ஆம்பல் இலையில் கள்ளே வார்த்து உண்டுவிட்டு, அருகிலுள்ள கடலின் அலேயொலியையே தாளமாகக் கொண்டு ஆடுகின்ற நல்ல நீர் வளம் பொருந்திய ஊர் களையுடைய நாட்டுக்கு வேந்தே, பல பழங்களேயும் உண் அணுதற்கு விரும்பி, ஆகாயத்தின்கண்ணே உயரப்பறந்து, மலேக்குகைகள் எதிரொலி முழங்கச் சென்று, அவ்விடத் துப் பழமுடைய பெரியமரம் பழுத்து ஓய்ந்ததாகஅதனே அறிந்து வருந்திப் பழம் பெருதே மீளும் பறவைகளைப் போலப் பிறரால் விரும்புதற்குரிய உன் கற்குணங்கள்