பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 நல்லிசைப் புலவர்கள்

என்னும் இப்பெயர், தெய்வப் பெயரை மக்கட்கு இட்டு வழங்கும் முறையில் இவர்க்கு வந்ததாகும். சாத்தனர் என்னும் பெயர் வாய்ந்த புலவர் பலராகலின், அவர்களி னின்றும் வேறு பிரித்தறிதற்குச் சினைப்பெயரொடு புணர்த்துப் பெருந்தலைச் சாத்தனர் என இவர் வழங் கப்பட்டார். பெருந்தலே' என்னும் அடைமொழியை இவர் பெயர்க்கு முன் சார்த்திக் கூறியது, குமணனது தலேயைப் பாதுகாத்த இவரது அருட்குணத்தைப் புலப்படுத்தவோ! என ஊகிக்கவும் படுகிறது.

தந்தையார் : இவர் தந்தையார் பெரும்புலவ ராய் விளங்கிய அவூர் மூலங்கிழார் என்பது, இவர் பாடிய அகானூற்று 384-ஆம் செய்யுளின் கொளுவில், "ஆவூர் மூலங்கிழார் மகனர் பெருந்தலைச் சாத்தனர்." எனக் குறித்துள்ளமையின் தெளியப்படும்.

குலம் : இவர் தந்தையாரின் பெயரோடு கிழார் என்னும் வேளாளர்க்குரிய சிறப்புப்பெயர் சேர்த்து வழங்கப்படுதலால், இப்பெருந்தலேச் சாத்தனுர் வேளாண் மரபினரென்பது ஒருதலை கிழார்' என்னும் பெயர் வேளாளர்க்குரியதென்பது, 'ஊரும் பேரும்” (தொல், மர. கு-74) என்ற சூத்திர உரையில் பேராசிரி யர், அம்பர்கிழான் நாகன் ; வல்லங்கிழான் மாறன் என்பன வேளாளர்க்குரிய,’ என எடுத்துக் காட்டு தலால் அறியப்படும்.

சமயம் : இவர் பாடல்களால் இவர் இன்ன கொள்கையினரென்பது அறியக் கூடவில்லையாயினும், இவர் தந்தையார் மூலங்கிழார் சோணுட்டுப் பூஞ்சாற் றுார்ப் பார்ப்பான் கெளனியன் விண்ணந்தாயனப் பாடிய 166-ஆம் புறப்பாட்டில்,

  • நன்ருய்ந்த நீணிமிர்சடை

முதுமுதல்வன் வாய்போகா தொன்றுபுரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த வொருமுதுநூல்