பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்தனுக் 冕器

எனச் சிவபெருமானையும், நான்கு வேதங்களேயும் ஆறங் கங்களேயும் சிறப்பித்துக் கூறுவதன்றியும், அப்பாட்டில் வேள்வியின் வகைகளையும், அவற்றைச் செய்யும் முறை களையும் விரித்துக் கூறிப் பெளத்த முதலாய வேதவழக் குக்கு மாருன கொள்கைகளை இழித்துக் கூறுதலானும், அவர் மறைசெறிப்பட்ட சமயத்தவரென்பதும், சிவ பெருமான்மீது பத்தி மிக்கவரென்பதும் புலனும் ; புலகைவே, அவர் மகனுராகிய இச்சாத்தருைம் அக்

கொள்கையினரெனக் கொள்கை பொருந்தும்.

பிறப்பிடம் : இவரது பிறப்பிடம் ஆவூரென்பது, இவர் தந்தையார் ஆவூர் மூலங்கிழார்' எனக் கூறப்படு தலால் அறியப்படும். இவ்வூர் சோணுட்டில் காவிரிக்கரை யில் உள்ளதென்பது, இவர் தந்தையார் மூலங்கிழார், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனிடம் முதன்முதற்சென்றிருந்தபோது அவன் அவரை நோக்கி, * எம்முள்ளீர், எங்காட்டீர் ' என்று வினவ, அவர், :நின்னிழற்பிறந்து கின்னிழல் வளர்ந்த எம்மளவெ வனே, என (38-ஆம் புறப்பாட்டில்) கூறுதலானும், கெளனியன் விண்ணங்தாயனப் பாடிய 166-ஆம் புறப் பாட்டில் தமது ஊரைப் 'பூவிரி புதுநீர்க் காவிரி புரக் கும், தண்புனற் படப்பை யெம்மூ ராங்கண்,” எனக் காவிரி பாயும் ஊராகக் குறித்திருத்தலானும் ஆய்ந்தறி யப்படும். இக்காலத்துச் சோழ நாட்டில் காவிரியின் தென்கரையில் ஆவூரென்னும் பெயரோடு ஒரூர் உளது. இது பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களுள் ஒன்று. இதுவே இவரது ஊராய் இருக்கலாமென்று ஊகிக்கப் படுகிறது. கித்த விநோத வளநாட்டின் உட்பிரிவான

1. மூலம் என்பது ஊர்ப்பெயருமாம்.