பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛籍 தல்லிசைப் புலவர்கள்

கொண்டு, ஊர்தியூர்ந்து, சேரநாட்டை விட்டு நீங்கிப் பாண்டிநாடு சேர்ந்து, தம்பதிக்கு வந்தணைந்து, அரசர் பால் பெற்ற பெருஞ்செல்வங்களால் தமது வாழ்க் கையை முட்டின்றி இனிது கடாத்தியிருந்தனர்.

இவ்வாறு புலவர் சோழ சேர மண்டலங்களில் தம் புகழ் ஒளியைப் பரப்பிவிட்டுத் தம் ஊர்க்கண் வந்து உறையும் காளிலே, தமது நாடாகிய பாண்டி நாட்டில் வாைேரேத்தும் ஆளுப் புலமை அகத்திய முனிவர்க்கு உறைவிடமாய், மந்தமாருதத்தோடு சந்தனமும் செக் தமிழுங் கலந்து சந்ததமும் கமழாகின்ற பொதியமா மலே யைச் சூழ்ந்த நாட்டின் பகுதியை, ஆய் குடி என்னும் ககர்க்கண்ணிருந்து ஆய் என்னும் வேளிர் குலத்தோன் றல் ஒருவன் ஆண்டுகொண்டிருந்தான்். அவன் அக்காலத் தில் விளக்கமுற்றிருந்த கடையெழு வள்ளல்களுள் ஒரு வன்; சிறந்த வீரன்: புலவர்க்கும் பாணர்க்கும் பொன் னும்,தேரும், களிறும், பரியுமாகியபெருஞ்செல்வங்களே வரையாதளிக்கும் வள்ளியோன்: கைம்மாறு கருதாது இரவலர்க்குக் கொடுத்து மகிழ்வித்தலேயே பெருங்கடப் பாடாகக் கொண்டோன்: இன்மொழியையே தன் மொழியாகவுடையவன். அவன் புகழ் தமிழ்வரைப்பெல் லாம் வரம்பின்றிப் பரந்தது. இத்தகைய வள்ளலின் அருங்குணத்தையும் கொடைத் திறத்தையும் மோசி யார் கேள்வியுற்ருர். அவனே விரைவிற்கண்டு களிக்க வேண்டுமென்ற அவா அவருள்ளத்திற் பெருகிற்று. அதனல், புலவர் தம் ஊரினின்றும் நீங்கிப் பல ஊர்களே யுங் கடந்து, பொதியமலைச் சாரலிலுள்ள ஆய் குடியை அடைந்து, ஆயை அவனது காளோலக்கத்திற் கண் டார் ; தாம் கேள்வியுற்றவாறே அவனது கொடைத் திறலே அறிந்து, இறும்பூது கொண்டார். ஆய்,புலவரைக்