பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 41

காணலும் விரைந்து வந்து, வரவேற்று, இன்முகத் துடன் அன்புரை வழங்கி, அருகிலுள்ள ஆசனத்தில் அமாச் செய்து, அவரது வரிசைக்குத் தக்க பரிசில் கல்க முற்பட்டனன். அது கண்டு புலவர் ஆயை நோக்கிச் சில கூறக் கருதி, எங்காளும் உனது கொடை மன்றத்தின் கண் வருகின்ற பரிசிலரைக் காணின், அவர்க்குக் கன்று களுடன் யானைகளை அணியணியாகச் சாய்த்துக் கொடுக் கும் மலேயையுடைய நாடனே, மாவேளாகிய ஆயே, புலி இயங்கும் சிகரமுயர்ந்த நெடிய மலையின்கண் ஏறுதற் கரிய பிளப்புக்களிலுள்ள வழியில் ஏறுதலான் வருத்த முற்று, உடல் வளைந்து, பைய அடியிட்டு கடக்கின்ற மெல்லிய கடையினையுடைய வளைகள் அணிந்த கையை யுடைய விறலி என் பின்னே வர, பொன்னேக் கம்பியா கச் செய்தாற்போன்ற முறுக்கடங்கிய நரம்பினையுடைய வரிப் பொருண்மையோடு பயிலும் பாட்டு, கிலத்துக்குத் தக்கவாறு மாறிமாறியொலிக்கும் படுமலைப்பாலை என்ற பண் கிறைந்த சிறிய யாழைத் தளர்ந்த நெஞ்சத்துடனே ஒரு மருங்கிலே அணைத்துக்கொண்டு, புகழ்தற்கமைந்த தலைமையையுடைய கினது புகழை சினைந்து வந்தேன் யான் ; இறைவா, யான் வேண்டியது யானையுமன்று : குதிரையுமன்று: குதிரையிற் பூட்டப்பட்ட தேருமன்று: வான் வந்த காரணம் கின்னேக் கண்டு மகிழ்வதே. பகை வரது மிக்க மாறுபாட்டை வென்ற வலியையும் யாவ ரும் ஒப்பப் புகழும் காட்டையும் உடையாய், பாண ரும், புலவரும், கூத்தர் முதலாயினரும், உன் செல்வங் களே உரிமையால் தம்முடைய பொருளென வளைத்துக் கொள்வாராயின், அவற்றை எம்முடையன என்று அவரிடத்தினின்றும் மீண்டுங் கைக்கொள்ளுதலைக் கரு தாமல், பயன் பொருந்திய அன்புரிமையோடு கூடும்