பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நல்லிசைப் புலவர்கள்

தன்மையவாக கின் வாழ்நாட்கள்,” என்று தாம் வந்ததற்குக் காரணம் கூறி, அவனது நாகரிகக் கொடை யைப் புகழ்ந்து வாழ்த்தினர்.

இதனேக் கேட்ட வள்ளல் பெருமானகிய ஆய், புல வரது திருந்திய புலமைத் திறத்தையும், பொருந்திய பெருங்குணத்தையும் தனது கூரிய மதியால் மதித்து உவந்து, புலவர் மறுத்தனரேனும், வலிந்து அவர்க்குப் புரவியும் களிறும் தேருமாகிய பெருஞ்செல்வங்களைப் பரிசிலாக வழங்கி, பாரி கபிலர் பெருமானேயும், அதிய மான் ஒளவைப் பிராட்டியாரையும் தம் உரிமை கட் பினராய்க் கொண்டது போல மோசியாரைத் தன் ஆருயிர் கண்பராய்க் கொண்டொழுகித் தன் அவைக் களத்துப் புலவர்க்குத் தலைவராக்கிக்கொண்டான். புல் வர் ஆயுடன் இடையரு து பழகி, அவனது அன்பு, அருள், பொறை, தேற்றம், சால்பு முதலான பெருங் குணக் கடலுள் மூழ்கித் திளேத்துத் தாம் கொடைமடத் தண்ணளியோணுகிய ஆயை முன்னரே வந்து கண்டு அவனது நண்பின் பயனே நுகராது வாளா கழிந்தமைக் கிரங்கியும், அவனைக் காணுத முன்னரெல்லாம் ஏனே யோரது சிறிய புகழைக் கண்டும் கேட்டும் கினைந்தும் பாடிப்போந்தமைக்கு வருந்தியும்,

'முன்னுள்ளு வோன ப் பின்னுள்ளி னேனே :

ஆழ்கென் னுள்ளம் ! போழ்கென் னுவே ! பாழுர்க் கிணற்றின் துர்கவென் செவியே:

  • * - * * 4 -- *.* a *** * يي وي.ه

எனப் பாடிப் பிறரைக் கருதிய தம் உள்ளத்தையும், பிறர் புகழைப் பாடிய தம் நாவையும், பிறர் இசையைக் கேட்ட தம் செவியையும் இழித்துக் கூறுவதன் மூலம் ஆயின் ஒப்பற்ற புகழ்க்குணத் திறனைப் புகழ்ந்து,