பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கோவூர் கிழார்

  • மன்ற வாணன் மலர்திரு வருனால் தென்றமிழ் மகிமை சிவணிய செய்த அடியவர் கூட்டமும் ஆதிச் சங்கமும் படியின்மாப் பெருமை பாவுறு சோழனும் சைவமா திவரும் தழைத்தினி திருந்த மையறு சோழ வளநாட்டின்கண் அதன் கண்போல விளங்கிய கோவூர் என்னும் ஊரிலே, இற்றைக்கு ஆரத்தெண்னுாறு ஆண்டுகட்கு முன் னர் வேளாள குல திலகராய் விளங்கிய சான்ருேர் ஒரு வர்க்கு, அவரும் தமிழகமும் செய்த தவப் பெரும்பல் குய்க் கோஆர் கிழார் என்னும் இப்புலவர் பெருமான் தோன்றினர். இவரை மகவாகப் பெறும் தகவுடைய சான தந்தையார், உரிய பருவத்தில் இவரைப் பள்ளிக்கு வைத்துக் கல்வி பயில்வித்தார். இவரும் காடோதும் காலத்தே பள்ளிக்குச் சென்று, ஆசிரியரை அணுகி வழி பாடு செய்து, அவரது குறிப்பின் வழி ஒழுகி, மடி, தடு மாற்றம், மானம், மறதி இல்லாது, ஆசிரியர் இரு எச் இருந்து, சொல் எனச் சொல்லி, அவர் உரைப்பனவற் றையெல்லாம்விடாது உள்ளத்தில் அமைத்து, விடாய்த் தவர்க்கு கீரிலுள்ள வேட்கைபோலக் கல்வியில் வேட் கை மிகவுடையவராய்ப் பழம்பாடம் போற்றியும், தம் மொடுகற்கும்பிறரொடு வினவியும்,அவர் வினவியதற்கு விடையிறுத்தும், தாம் கற்றவற்றைப் பிறர்க்கு எடுத்து அறிவுறுத்தியும், உத்தம மாணுக்கர்க்குரிய குணங்கள் அத்தனையும் வாய்ந்து, இலக்கிய இலக்கணத் துறைகள் அனேத்தினும் சென்று, ஐயம் திரிபறக் கற்ருர். இங்ங்