இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பிறகு அந்த எறும்பு, தரையில் கிடந்த சோற்றை வயிறு நிரம்பத் தின்று தண்ணிரும் குடித்தது.
1 O
சிறிது நேரம் சென்றதும் பள்ளிக்கூட மணி அடித்தது. பிள்ளைகள் எல்லோரும் தங்கள் தங்கள் வகுப்புக்குச் சென்ருர்கள். அந்த எறும்பு. மறுபடியும் பள்ளிக்கூடம் போக விரும்பவில்லை. அதற்குத் தன் வீட்டின் மீதே எண்ணம் இருந்தது. இப் போது அது எப்படி வீட்டுக்குப் போகும்?', என்று நீங்கள் கேட்பீர்கள். அந்த எறும்பு அதைத் தான் முதலில் யோசித்தது. ஆனல் அது மிகவும் புத்திசாலி. ஆதலால், அந்த எறும்பு அப்போதே சென்று கோபாலன் சாப்பாட்டுப் பாத்திரம் ஒன்றில் ஒளிந்து கொண்டது.
பிள்ளைகள் சென்றதும், சாப்பாட்டுக் காரி, அந்தச் சாமான்களை எடுத்துக் கூடை யில் வைத்துக் கொண்டு விட்டுக்குச் சென்ருள். அந்த எறும்பு மகிழ்ச்சியோடு வீடு போய்ச் சேர்ந்தது.
24