பக்கம்:நல்ல கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தாயின் மீது சிறிதுகூட அனுதாபம் கொள்ளாமல் கேலியாகவும், கிண்டலாகவும், கண்ணன் பேசினான். பெற்ற தாயைத்தான் அவன் மதிப்பதே கிடையாதே!

'சனியன் தொலைந்தது என்று தாய் வெளியே போய்விட்டதை அறிந்து, அந்த மூலையை நெருங்கி விட்டான்.

'5 ரூபாய் அதில்தான் இருக்கிறது. பத்திரமாக இருக்கும்' என்று சந்தோஷமாக ஒரு முறை கூறிக் கொண்டான். பணத்தை எடுத்துக் கொண்டு பறந்துவிட வேண்டியது தான் என்று வேகமாய் மூலைக்குள் கையை விட்டான்.

சுரீர் என்றது கை விரல்களில்.

விட்டவேகத்தில் கையை வெடுக்கென இழுத்துக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/29&oldid=1081123" இலிருந்து மீள்விக்கப்பட்டது