பக்கம்:நல்ல கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

72


அரை கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்பது பந்தயம்.

ஆகவே, தோற்றுப் போவதற்குத் துணிந்தாலும், ஆளைத் தூக்கிப் போவதற்கு வெட்கப்பட்ட அனைவரும், அன்றைய ஆட்டத்தில் அதிக அக்கறை காட்டினார்.

முரட்டுத்தனமும், முன் கோபியாகவும், சண்டைப் போடுவதில் சண்டைப் பிரசண்டனாகவும் விளங்கிய சிங்காரத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ!

சிங்காரம் அன்று நெருப்பாக இருந்து ஆடினான்.

எப்பொழுதும் வெற்றி பெறும் சிங்காரத்தின் குழு, அன்று சந்திரனது குழுவைச் சந்தித்து, முன்னேற முடியாமல் திணறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/75&oldid=1081393" இலிருந்து மீள்விக்கப்பட்டது