பக்கம்:நல்ல கதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அநாதையா? வருத்தத்துடன் அந்த பெண் கேட்டாள்.

சிங்காரத்தின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. மேலும் கேள்விகள் கேட்கவோ, விசாரிக்கவோ அவள் விரும்பவில்லை.

படிக்க ஆசையிருக்கிறதா அல்லது வேலை செய்கிறாயா என்று அந்த மாது மிகவும் அன்புடன் கேட்டாள்.

ஒரு வேளை சாப்பாட்டுக்கு நாள் முழுதும் உழைத்தாலும், முடியவில்லையே நான் படிக்க ஆசைப்பட்டாலும் எப்படி முடியும்.

உல்லாசமாக வாழ்ந்த தன் கிராமத்து வாழ்க்கையையும், செல்லமாகத் தன் பெற்றோர்களுடன் வாழ்ந்த நாட்களையும் நினைத்த பொழுது சிங்காரத்தின் கண்கள் கண்ணீரைச் சிந்தின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/88&oldid=1081470" இலிருந்து மீள்விக்கப்பட்டது