பக்கம்:நல்ல தமிழ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நல்ல தமிழ் — பெரும்பாலு ம் எழுதும் முறையிலேதான் ஊன்றிக் கவனிக்கப் பெறும், இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் வாக்கிய அமைப் புக்கள் நன்கு ஆராய்ந்து எழுதப்படின், நல்ல தமிழ் உருவா விகற்குத் தடையும் உண்டுட்: தமிழில் வினா விடைகளைப் பற்றியும் விளக்கியிருக் கிறார்கள். அந்த நிலைகளை நன்கு அறிந்து கொண்டால் பல உண்மைகள் விளங்கும். ஆசிரியர் மாணவனைப் பார்த்துத் தமிழ் எழுத்துக்கள் எத்தனை? என்று கேட் பதற்கு என்ன பொருள்? ஆசிரியருக்கு அந்த எண் தெரியாது என்பது பொருளா? அன்று. அதை ஆசிரியர் அறிவார். சிற்று அங்ங்னம் ஏன் கேட்கிறார்? மாணவனுக்கு அது தெரிந் துள்ளதா என அறிவதற்காகத்தானே? ஆம்! அத்தகைய வினாவிற்கு அறி வினா என்பது பெயர். அதே கேள்வியை மாணவன் கேட்டால் அறியா வினா ஆகின்றது. சில இடங் களில் (இதுவோ, அதுவோ எனும்) ஐயத்தாலும் சில இடங் க்ளில் பொருளைப் பெறவும் (இதை எனக்குத் தருவாயா?), சிலவிடங்களில் கொடுப்பதற்காகவும் (இது உனக்கு வேண் மொ?), சிலவிடங்களில் ஏவுவதற்காகவும் (நீ இதை செய். கிறாயா?) வினாவை எழுப்புவர். இவற்றால் வினா இன் னின்ன பொருளில் வரும் என நுணுகி ஆராய்ந்த திறன் எண்ணி வியக்கக் கூடியதாய் இல்லையா? இவ்வாறு நாம் பேசும் போதும் எழுதும் போதும் சாதாரணமாக உபயோகப் படுத்தும் வினாவுக்கும் விடைக்குங்கூடத் திட்டமான வரை யறுத்த பொருளையும் நிலையையும் வகுத்து அவற்றின் வரம்பு மீறா நிலையில் இருந்து மொழியைப் பாதுகாக்க வேண்டுமென் வகுத்த இலக்கண அமைப்பு எண்ணத்தக்க தன்றோ? இனி இந்த வினாவுக்கு எந்தெந்த எழுத்துக்கள் பயன்படும் என்பதை இடையியலில் நன்கு காட்டுகிறார்கள். 'ஏ' 'ஒ' போன்ற இடைச்சொற்களாக வரும் எழுத்துக்கள் இவ்வினாவை உணர்த்துவதோடு, வேறு என்னென்ன பொருள்களில் வழங்கப்பெறும் என்பதையும் காட்டுகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/100&oldid=774997" இலிருந்து மீள்விக்கப்பட்டது